முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சச்சினைப் போல சிறந்த வீரர் யாரும் இல்லை - ரிச்சர்ட்ஸ்

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

போர்ட் ஆப் ஸ்பெயின், ஜூன். 4 - எனது கிரிக்கெட் வாழ்க்கையைப் பொறுத்தவரை, நான் பார்த்த பே ட்ஸ்மேன்களில் சச்சின் டெண்டுல்கரைப் போல சிறந்த வீரர் யாரும் இல்லை என்று மே.இ. தீவின் முன்னாள் கேப்டனான விவியன் ரிச்சர் ட்ஸ் புகழாரம் சூட்டி இருக்கிறார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சர் டொனால்டு பிராட்மேனை மே.இ.தீவு வீரர் ரிச்சர்ட்ஸ் பார்த்தது கிடையாது. தற்போதைய வீரர்களில் டெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மேன் என்று அவர் தெரிவித்து இருக்கிறார். 

இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயா  ன 20 -க்கு 20 போட்டி போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் இன்று துவங்கு கிறது. இதனையொட்டி அங்கு வந்திருந்த விவியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இதனை குறிப்பிட்டார். 

மேலும், நான் பிராட்மேனை பார்த்தது கிடையாது. ஆனால் எனது கிரிக்கெட் வாழ்க்கையைப் பொறுத்தவரை, நான் பார்த்த பேட்ஸ்மே ன்களில் டெண்டுல்கரைப் போல சிறந்த வீரர் யாரும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 

தவிர, டெண்டுல்கரை விட தற்போது சிறந்த பேட்ஸ்மேன் யாரும் உண்டோ?  இதுவரை யாரும் இல்லை என்றும் ரிச்சர்ட்ஸ் கூறியிருக்கிறார். ரன் மெஷின் என்றழைக்கப்படும் ரிச்சர்ட்சே டெண்டுல்கரைப் பாராட்டி இருப்பது அவருக்கு கிடைத்த பெருமையாகும். 

தற்போதைய வீரர்களில் பிரையன் லாரா, ரிக்கி பாண்டிங், ஜாக்ஸ் காலிஸ், முன்னாள் வீரர்களில் சுனில் கவாஸ்கர் மற்றும் ஜாவித் மி   யாண்டத் போன்றவர்கள் சிறந்த வீரர்களாக கருதப்படுகின்றனர். 

ஆனால் இந்த சகாப்தத்தைப் பொறுத்தவரை இவர்களை எல்லாம் விட சச்சன் டெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மேன் என்று மே.இ.தீவின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விவியன் அடித்து சொல்கிறார். 

ஆஸ்திரேலியாவின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான டான் பிராட் மேனின் ஆட்டம் 20 வருடங்களுக்கு முன்பாகவே முடிந்து விட்டது. இதில் இரண்டாவது உலகப் போர் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் சில காலம் தடை பட்டது. 

50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி இரண்டு முறை கோப்பையை வென்று சாதனை படைத்தது. ஒரு முறை இறு திச் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த 3 போட்டியிலும் ரிச்சர்ட்ஸ் பங்கு கொண்டது நினைவு கூறத்தக்கது. 

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான டெண்டுல்கர் டெஸ்ட் மற் றும் ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தும், அதிக ரன் குவித் தும் சாதனை படைத்து இருக்கிறார். தவிர, பல்வேறு சாதனைகளை யும் முறியடித்து வருகிறார். அவரது சாதனைப் பட்டியல் தொடர்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்