முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய அமைதி மாநாடு: சீதாராம் யெச்சூரி கலந்து கொள்கிறார்

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மே.4 - வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெறவிருக்கும் 2 நாள் ஆசிய அமைதி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இடது கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி நேற்று டாக்கா நகருக்கு போய் சேர்ந்தார். ஆசிய கண்டத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. சில நாடுகளை ஏற்கனவே அபகரித்து வைத்துள்ளது. மேலும் சில நாடுகளின் நிலப்பகுதியை அபகரிக்க முயற்சி செய்து வருகிறது. இதற்காக பாகிஸ்தானுடன் வஞ்சக உறவு கொள்கிறது. இந்தநிலையில் அமைதி மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஆசிய அமைதி மாநாடு இன்று டாக்காவில் ஆரம்பமாகிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த அமைதி மாநாட்டை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா தொடங்கிவைக்கிறார். இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை உலக அமைதி கவுன்சிலும் வங்கதேச அமைதி கவுன்சிலும் செய்துள்ளன. மாநாட்டின் முதல் நாளன்று சீதாராம் யெச்சூரி உரையாற்றுகின்றார். உலக முழுவதிலும் இருந்து முக்கிய பிரமுகர்கள் அடங்கிய குழுவினர் கலந்துகொள்கிறார்கள். உலக அமைதிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், சர்வாதிகாரம், பயங்கரவாதம், மதவாதம்,சுற்றுப்புறசூழல் பாதிப்பு குறித்து மாநாட்டில் பேசப்படும் என்று தெரிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்