முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரேசன் மண்ணெண்ணெய் பதுக்கல்: தி.மு.க. நிர்வாகி கைது

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஜூன்.5 - மதுரை அருகே ரேசன் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருந்ததாக தி.மு.க நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் தி.முக. நகர செயலாளர் முனியாண்டி. இவரது வீடு சோழவந்தான் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ளது. போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மதுரை உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார் அவரது வீட்டில் சோதனையிட்டனர். அப்போது 10 க்கும் மேற்பட்ட கேன்களில் 120 லிட்டர் ரேசன் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் முனியாண்டியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்