முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வருக்கு தமிழ்நாடு அமைச்சு பணியாளர் கூட்டமைப்பு வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.5 - மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு காவல்துறை அமைச்சு பணியாளர்கள் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.தமிழ்நாடு அரசு அமைச்சு பணியாளர்கள் கூட்டமைப்பு கூட்டம் அச்சங்கத்தின் மாநில தலைவர் க.ரவிசந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் த.பிரம்மநாயகம், மாநில பொருளாளர் கே.சிவராமசந்திரன் தலைமை நிலைய செயலாளர் முகுந்தன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் 3-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதாவை வாழ்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதேபோல் தமிழ்நாடு காவல் துறை அமைச்சு பணியாளர் சங்க பொதுக்குழுவில் 3-வது முறை முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதாவிற்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான தகவலை அச்சங்கத்தின் மாநில தலைவர் முகுந்தன தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்