முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராம் தேவ்க்கு ஆதரவாக சிவசேனா- பதஞ்சலி யோக் உண்ணாவிரதம்

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஜூன்.5 - டெல்லியில் உண்ணாவிரதம் இருந்து வரும் பாபாராம் தேவ்க்கு ஆதரவாக மதுரையில் தமிழச சிவசேனா உள்பட பல்வேறு அமைப்புக்கள் உண்ணாவிரதம் இருந்தன.

  ஊழல், லஞ்சத்திற்காக எதிராக சுவாமி பாபாராம் தேவ் டெல்லியில் நேற்று முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்த உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புக்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தன. மதுரை பைபாஸ் ரோட்டில் தமிழக சிவசேனா சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. மாநில செயல் தலைவர் தூதை செல்வம் தலைமை வகித்தார். மகளிரணி தலைவி சாந்தி முன்னிலை வகித்தார். உண்ணாவிரத்தை மாநிலதலைவர் எம்.திரவியபாண்டியன் துவக்கி வைத்து பேசினார். இந்த உண்ணாவிரத்தில் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள், ஆதமசைதன்யானந்தஜீ மகராஜ் உள்ளிட்ட ஏராலமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில துணைத்தலைவர் கே.நரசிம்மன் நன்றி கூறினார்.

     இதை போல் மதுரை காளவாசல் பகுதியில் பதஞ்சலி யோக் சமிதி, பாரத் ஸ்வாபிமான டிரஸ்ட் சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு வக்கீல்கள் சங்க அமைப்பாளர் தமிழரசன் தலைமை வகித்தார். தியாகி மாயாண்டிபாரதி உண்ணாவிரத்தை துவக்கி வைத்தார். தீபக் அர்ஜூன்சிங் பாலாஜி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago