முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் பெண் பலி

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சிவகாசி, ஜூன்.5 - சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இளம்பெண் ஒருவர் பலியானார். மற்றொரு இளைஞர் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுபற்றிய விபரம் வருமாறு; விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ளது சல்வார்பட்டி. இங்கு முருகன் என்பவருக்கு சொந்தமான சக்தி பயர் ஒர்க்ஸ் உள்ளது. இங்கு 25 அறைகள் உள்ளன. 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று மதிய உணவு இடைவேளையின்போது ஒரு அறையில் பேன்ஸி ரக பட்டாசு தயாரிக்கும் பணியில் சாத்தூரைச் சேர்ந்த இளம்பெண் சரோஜா(29), சாத்தூர் படந்தாலைச்சேர்ந்த இளைஞர் ரஹீம்(32) ஆகியோர் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது மணிமருந்து செலுத்தும்போது உராய்வு ஏற்பட்டு தீப்பொறி கிளிம்பி வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் இளம்பெண் சரோஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். படுகாயமடைந்த இளைஞர் ரஹீம் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குபதிவுசெய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago