முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சினிமா கலைஞர்களை உருவாக்கும் கேப்டன் டி.வியில் கனவு பட்டறை

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.5 - கேப்டன் டிவியில் கனவு பட்டறை என்ற புதிய நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது. இதுகுறித்து நடிகர் ஆனந்தகண்ணன், இயக்குனர் விவேக் ஆகியோர் கூறியதாவது:-

கேப்டன் டிவியில் தினமும் இரவு 8.30 மணிக்கு  ஒளிப்பரப்பாகும் சின்னத்திரை வரலாற்றில் ஒரு மாறுபட்ட நிகழ்ச்சி கனவு பட்டறை. இது தலை சிறந்த நம் தமிழ்திரைப்பட உலகில் இடம்பெற துடிக்கும் கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கும் மாபெரும் நிகழ்ச்சி.

இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் சின்னத்திரை தொகுப்பாளர் நான் (ஆனந்த் கண்ணன்)  இந்நிகழ்ச்சியில் 10 முதல் 15 நிமிடங்கள் வரையில் தயாரிக்கப்பட்ட குறும்படங்களை திங்கள் முதல் வெள்ளிவரை ஒளிப்பரப்பு செய்து, அந்த 5 போட்டியாளர்களில் 1 வெற்றியாளரை மக்களின் வாக்கு முறையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதுவரை 800 குறும்படங்கள் வந்துள்ளது.

இதுபோல் 24 குழுவினர்கள் 2-ம் கட்டபோட்டிக்கு மக்கள் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் வெற்றிபெரு 1 குழுவிற்கு கேப்டன் சினி கியேசன்ஸ் தயாரிப்பில் ஒரு முழுநீள திரைப்படம் இயக்கும் வாய்பபு வழங்கப்படும்.

இதுவரை 6 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 24 வாரம் ஒளிபரப்பாக உள்ளது. 6 மாதம் கழித்து சிறந்த திரைப்பட குழுவினர் தேர்வு செய்யப்படுவார்கள். முதன் முறையாக கேப்டன் டி.வியில் தான் இந்த நிகழ்ச்சி உருவாக்கியுள்ளது.

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படத்தை இந்த குழுவினர்கள் உருவக்குவார்கள். ஒரு படத்திற்கு ரூ.2 கோடி முதல் ரூ.20 கோடி வரை பட்ஜெட் கொடுத்தாலும் படம் தயாரிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்