முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.இ.தீவுக்கு எதிரான டி - 20 யில் வெற்றி பத்ரிநாத் , ரோகித் சர்மாவுக்கு கேப்டன் ரெய்னா பாராட்டு

திங்கட்கிழமை, 6 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

போர்ட் ஆப் ஸ்பெயின், ஜூன். - 6 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக போர்ட் ஆப் ஸ்பெயின் நக ரில் நடந்த டி - 20 போட்டியில் இந்திய அணி பரபரப்பான ஆட்டத்தில் 16 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  இந்திய அணி தரப்பில் பத்ரிநாத் மற்றும் ரோகித் சர்மா இருவரும் அதி ரடியாக ஆடி அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தனர். இந்திய அணியி ன் வெற்றிக்கு உதவிய மேற்படி இருவரையும் தற்காலிக கேப்டனான சுரேஷ் ரெய்னா பாராட்டினார்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே  யான ஒரே ஒரு டி - 20 போட்டி டிரினிடாட் தீவில் போர்ட் ஆப் ஸ் ெபயின் நகரில் உள்ள குவீன்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்தது.  இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்க ப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்னை எடுத்தது. பத்ரிநாத் 43 ரன்னையும், ரோகித் சர்மா மற்றும் பார்த்திவ் படேல் இருவரும் தலா 26 ரன்னையும் எடுத்தனர். சம்மி 4 விக்கெட் எடுத்தார்.
பின்பு ஆடிய மே.இ.தீவு அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 143 ரன்னை எடுத்தது. இதனால் இந்திய அணி 16 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில், பிராவோ 41 ரன்னையு ம், பர்ன்வெல் 34 ரன்னையும், சாமுவேல்ஸ் 27 ரன்னையும், எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில், ஹர்பஜன் சிங் 2 விக்கெட் வீழ்த்தினார். தவிர, முனாப் படேல், பிரவீன் குமார் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக பத்ரிநாத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் தற்காலிக கேப்டனான ரெய் னா நிருபர்களிடம் கூறியதாவது - எங்களது ஆட்டம் சிறப்பாக இருந்த து. பந்து வீச்சாளர்கள் திட்டமிட்டபடி சிறப்பாக பந்து வீசினார்கள்.
பத்ரிநாத், ரோகித் சர்மா ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் தான் இந்த வெற்றி கிடைத்தது. எங்களது பீல்டிங்கும் சிறப்பாக இருந்தது. புதி ய பயிற்சியாளர் பிளட்சர், பீல்டிங் பயிற்சியாளர் டிரே பென்னி ஆகி யோர் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த மே.இ.தீவுக் கேப்டன் சம்மி கூறியதாவது - ஆடுகளம் மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. முதலில் பீல்டிங்கை தேர்வு செய்த முடிவு சரியானது தான்.
கூடுதலாக 20 ரன்கள் வரை கொடுத்து விட்டோம். சுழற் பந்து வீச்சை எதிர்கொண்டு ஆடுவதில் எங்கள் பேட்ஸ்மேன்கள் சிரமப்பட்டனர். ஒரு நாள் போட்டியில் அந்த நிலை இருக்காது என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஆட்டநாயகன் விருது பெற்ற பத்ரிநாத் கூறியதாவது - எனது ஆட்டம் சிறப்பாக இருந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் வெற் றிக்கு எனது ஆட்டம் உதவியாக இருந்தது மகிழ்ச்சியை தருகிறது என்றார்.
இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயா
ன முதலாவது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது. இந்தப் போட்டி டிரினிடாட்டில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு துவங்குகிறது.
 
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்