முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராம்தேவ் விவகாரம் ஜனாதிபதி தலையிட பா.ஜ.க. கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 7 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜூன்.- 7 - ராம்தேவ் உண்ணாவிரத விவகாரத்தில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் தலையிட்டு முடிவெடுக்கவேண்டும் என்று பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளது. ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த ராம்தேவ் டெல்லியில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது. டெல்லி காந்தி சமாதியில் 24 மணி நேர சத்தியாகிரகம் நடைபெறும் என்றுஅறிவித்து பா.ஜ.க. தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, தலைவர் நிதின் கட்காரி, சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி ஆகியோர் கலந்து கொண்டு காங்கிரஸ் அரசை கண்டித்து பேசினர். போராட்டம் விடிய விடிய அதிகாலை வரை நடைபெற்றது. மூத்த தலைவர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர். கட்சி நிர்வாகிகள் சோர்ந்து விடாமல் இரப்பதற்கு இளைஞர்கள் நடனமாடினர். சுஷ்மா சுவராஜூம் அவர்களோடு சேர்ந்து ஆடி உற்சாகப்படுத்தினர். நேற்று காலை சத்தியாகிரகத்தை முடித்துக்கொண்டு பா.ஜ.க. தலைவர்கள் மதியம் 12.30 மணியளவில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை சந்தித்து பேசினர். ராம் தேவ் உண்ணாவிரதத்தை போலீசார் கலைத்த விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட அவர்கள் கேட்டுக்கொண்டனர். மேலும் பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும் பா.ஜ.க. தலைவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை பார்த்து காங்கிரஸ் அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். தேசமெங்கும் மக்களிடம் கோப அலை வீசுகிறது. மக்கள் உரிய வகையில் அரசுக்கு பாடம் புகட்டுவார்கள் என்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்