முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் எதிர்ப்பு போராட்டம் 2-ம் சுதந்திரப்போட்டம் சேதுராமன் கருத்து

செவ்வாய்க்கிழமை, 7 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

மதுரை,ஜூன் -.7 - ஊழல் மற்றும் கறுப்பு  பணம் தொடர்பாக டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த யோகா குரு பாபா ராம்தேவை வலுக்கட்டாயாக போலீசார் அப்புறப்படுத்தியது. இந்திரா காலத்து நெருக்கடி நிலைக் காலத்துக்கு சமமானது. ஊழலுக்கு எதிராகப் போராடுகிறவர்களை இப்படி அடக்கு முறை மூலம் அடக்கிவிடலாம் என்று காங்கிரஸ் அரசு நினைக்கிறது. சுந்திரத்திற்காக போராடிய காங்கிரசை எதிர்த்தே மக்கள் போராடும் சூழல் ஏற்பட்டுவிடும் என்று டாக்டர் சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது;  காங்கிரஸ் கட்சியினர் தேசியவாதி போல நடந்து கொள்ளவில்லை. நாலாந்திர அரசியல்வாதி போல நடந்து கொள்வதற்கு உதாரணம் தான் பாபா ராம்தேவ் ஆதரவாளர்கள் மீது நடத்திய தாக்குதல். எந்த வித பாவமும் செய்யாத,யாருக்கும் அநீதி இழைக்காத இந்த நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க போராடியவர்களை அடக்கு முறை மூலம் அகற்றுவது என்பது அப்பட்டமான பாசிச நடவடிக்கை. இதற்கு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் டில்லி முதல்வர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். ஒரு நாட்டின் தலைநகரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பது என்பது ஒட்டு மொத்த தேசத்தின் மீதே தடை உத்தரவு போடுவதற்கு சமம்.  இந்த நாட்டில் இருக்கக்கூடிய பீடைகளில் முதன்மையாக இருப்பது வறுமையும், ஊழலும், இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சேர்ந்திருப்பது. சுதந்திர போராட்டத்தில்யார் வென்றார்கள் என்பதை உலகம் அறியும். குறிப்பாக காங்கிரசார் நன்கு அறிவார்கள். இந்த நாட்டை நேசிக்கிற, இந்த நாட்டை முன்னேற்ற துடிக்கிற எல்லோரும் இரண்டாம் சுதந்திரப்போரான ஊழலுக்கு எதிரான நிலையை தைரியமாக மக்களுக்கு எடுத்துச்சொல்வோம். லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்று வெற்றி நடைபோடுவோம் என்று டாக்டர் சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்