முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரேபல் நடால் சாம்பியன்

செவ்வாய்க்கிழமை, 7 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

பாரிஸ், ஜூன். - 7  - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்றில் உலக நம்பர் - 1 வீரரான ரேபல் நடால் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தார்.  பரபரப்பாக நடந்த இறுதிச் சுற்றில் சுவிட்சர்லாந்து வீரரான ரோஜர் பெடரரை, நடால் வீழ்த்தி பட்டம் வென்றார். நடால் 6 -வது முறையா க இங்கு பட்டம் வென்று சாதனை புரிந்து இருக்கிறார். இந்த வருடத்தின் இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் கடந்த இரண்டு வார காலமாக நடைபெற்று வந்தது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீர ர்கள் மற்றும் வீராங்கனைகள் களத்தில் குதித்தனர். கடந்த 3 நாட்களில் இந்தப் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது. 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவ ர்களது ஆட்டத் திறன் கண்டு ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்றில் ஸ்பெயின் வீரரான ரேபல் நடாலும், சுவிஸ் வீரரான ரோஜர் பெடரரும் பலப்பரிட்சை நடத்தினர். இந்தப் போட்டியை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர். 

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில் நடா ல் அபாரமாக ஆடி பெடரரை தோற்கடித்தார். நடால் இறுதியில் 7 - 5, 7 - 6 (7 - 3), 5 - 7, 6 - 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 

உலகின் முதல் நிலை வீரரான ரோஜர் பெடரர் பிரெஞ்சு ஓபன் பட்டத் தை 6 -வது முறையாக வென்று இருக்கிறார். இதன் மூலம் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 6 முறை வென்ற ஜார்ன் போர்க்கின் சாதனையை அவர் சமன் செய்து இருக்கிறார். 

ஒட்டு மொத்தமாக நடால் பெற்ற 10 -வது கிராண்ட ஸ்லாம் பட்டம் இதுவாகும். இதன் மூலம் இளம் வயதில் 10 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற 2 -வது வீரர் என்ற பெருமையை நடால்  பெற்றார். 

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முன்னணி வீரரான நடாலுக்கு தற்போது 25 வயதாகிறது. இதற்கு முன்பாக சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஜார்ன் போர்க் 24 வயதில் 10 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றது குறிப்பிடத் தக்கது. 

உலகின் முதல் நிலை வீரரான நடால் வென்ற 10 கிராண்ட் ஸ்லாம் பட்டம் விபரம் வருமாறு - ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை கடந்த 2008 -ம் ஆண்டு வென்றார். பிரெஞ்சு ஓபனை 2005, 06, 07, 08,10 மற்று ம் 11 -ம் ஆண்டுகளில் வென்றார். 2008 மற்றும் 10 களில் விம்பிள்டனையும், 2010 ல் அமெரிக்க ஓபனையும் வென்று இருக்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்