முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் குண்டுவெடித்து 25 பேர் உடல் சிதறி பலி

செவ்வாய்க்கிழமை, 7 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், ஜூன் - 7 - பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் நேற்று இரு வேறு இடங்களில் நடந்த வெவ்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 25 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 50 பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள பெஷாவர் நகரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள நவ்ஷேரா கண்டோன்மெண்ட் பகுதியில் ராணுவத்தினர் நடத்திவந்த ஏ-ஒன் பேக்கரியை குறிவைத்து தீவிரவாதிகள் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தினர். இதில் 18 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்தார்கள். ஏற்கனவே பேக்கரியில் வெடிகுண்டை வைத்துவிட்டு அந்த வெடிகுண்டை வெளியில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் தீவிரவாதிகள் வெடிக்கச் செய்துள்ளனர் என்று மாகாண தகவல் துறை அமைச்சர் மியான் இப்திகார் ஹூசேன் கூறினார். குண்டு வெடித்த உடனேயே பேக்கரியில் வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர்களும் வெடித்து சிதறின. இதனால் அந்த பேக்கரி தீப்பிடித்து பயங்கரமாக எரிந்தது. நேற்று இந்த பேக்கரியில் கூட்டம் அதிகமாக இருந்தபோது காலை 8.30 மணிக்கு இந்த பயங்கர சம்பவம் நடந்தது. 

பலியானவர்களில் ஒரு ராணுவ அதிகாரியின் மனைவியும், இரண்டு குழந்தைகளும் அடங்குவர். மேலும் ஒரு பஸ் ஸ்டாப்பை குறிவைத்து நடத்தப்பட்ட இன்னொரு தீவிரவாத தாக்குதலில் 7 பலியானார்கள். 10 பேர் படுகாயம் அடைந்தார்கள் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்