முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திட்டமிட்டபடி ஹசரே இன்று உண்ணாவிரதம் இருக்கிறார்

செவ்வாய்க்கிழமை, 7 ஜூன் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,மே.8 - போலீசார் அனுமதி மறுத்துள்ள போதிலும் அண்ணா ஹசரே இன்று திட்டமிட்டபடி புதுடெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் உண்ணாவிரதம் இருக்கிறார். 

நாட்டில் ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக பாபா ராம்தேவ் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். அவருடன் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் உண்ணாவிரதம் இருந்தனர். திடீரென்று போலீசார் நள்ளிரவில் சென்று பாபா ராம்தேவையும் அவரது ஆதரவாளர்களையும் ராம்லீலா மைதானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க பாராளுமன்ற சிறப்புக்கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பாரதிய ஜனதா தலைவர்கள், ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை சந்தித்து வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர். மேலும் பாபா ராம்தேவ் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஜந்தர் மந்தர் பகுதியில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கப்படும் என்று அறிவித்தார். இதற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டது. இருந்தபோதிலும் ாறுபட்ட அரசியல் சூழ்நிலையும் உருவாகி உள்ளது. ராம்தேவ் விவகாரத்தால் டெல்லியில் பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது. அதனால் அந்த பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் அண்ணா ஹசரேவுக்கு உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்