முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் மசோதா: கருத்து தெரிவிக்க மாயாவதி மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 7 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

லக்னோ, ஜூன் 8 - ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா குறித்து கருத்து தெரிவிக்க உத்தரபிரதேச முதல் மந்திரி செல்வி மாயாவதி மறுத்துவிட்டார். ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதா நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரே டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதையடுத்து மத்திய அரசு லோக்பால் மசோதாவை நிறைவேற்ற ஒப்புக்கொண்டு அதற்காக ஒரு குழுவையும் நியமித்தது. இந்த குழுவில் அன்னா ஹசாரே மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்பட 10 பேர் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் ஊழலுக்கு எதிரான சட்டத்தில் பிரதமர் உள்பட நீதித்துறையையும் சேர்க்க வேண்டும் என்று அன்னா ஹசாரே கருத்து தெரிவித்தார். இதையடுத்து மத்திய அரசு தீவிரமான முயற்சி எதையும் எடுக்காததால் யோகா குரு பாபா ராம்தேவ் டெல்லியில் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தார். இந்த போராட்டத்தை நிறுத்த மத்திய அமைச்சர்கள் பகீரத பிரயத்தனம் செய்தனர். ஆனால் ராம்தேவ் தான் குறிப்பிட்டபடி டெல்லி ராம்லீலா மைதானத்தில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். 

இதையடுத்து உண்ணாவிரதம் இருந்த ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் டெல்லி போலீசாரால் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றப்பட்டனர். இதையடுத்து ராம்தேவ், ஹரித்வாரில் தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து நடத்திவருகிறார். டெல்லி போலீசார் ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது பலாத்காரத்தை கையாண்டதை கண்டித்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று மீண்டும் டெல்லியில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். 

இந்நிலையில் லோக்பால் வரைவு மசோதா கூட்டுக்குழுவின் தலைவரும் மத்திய நிதியமைச்சருமான பிரணாப்முகர்ஜி கருத்து தெரிவிக்குமாறு உத்தரபிரதேச முதல்வர்  மாயாவதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்திற்கு மாயாவதி 4 பக்க பதிலை அனுப்பியுள்ளார். அதில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக இந்த மசோதா  குறித்து தங்களது கட்சி அந்த சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும் அது பாராளுமன்ற பாரம்பரியத்திற்கு முரணானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்