முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசை வரலாறு மன்னிக்காது: ராம்தேவ்

புதன்கிழமை, 8 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

ஹரித்துவார், ஜூன்.- 8 - உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது பிரதமரின் உத்தரவு படி தடியடி நடத்தப்பட்டது. இதனை தவிர வேறு வழியில்லை என்று பிரதமர் கூறியுள்ளார். அவரை நான் மன்னித்தாலும் கூட உலக வரலாறு மன்னிக்காது என்று ஆவேசமாக ராம்தேவ் கூறினார். ராம்லீலா மைதானத்தில் ராம்தேவ் தலைமையில் ஊழலுக்கு எதிராக உணஅணாவிரதம் இருந்த போது சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக அவர்கள் மீது டெல்லி போலீசார் தடியடி நடத்தினர். இதற்கான உத்தரவு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அறிவுறுத்தலின் படி பிரதமர் நடைமுறை படுத்தினார் என்று கூறப்படுகிறது. இது குறித்து ராம்தேவ் நிருபர்களுக்கு ஹரித்துவாரில் பேட்டியளிக்கும் போது கூறியதாவது, பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் நடந்த எங்கள் உண்ணாவிரதத்தை திடிடமிட்டு சீர்குலைத்துவிட்டார். இதன்மூலம் அவர் பெரும் பாவம் செய்துவிட்டார். நான் அவரை மன்னித்துவிட்டேன். ஆனால் அவர் செய்த பாவத்திற்காக வரலாறு அவரை மன்னிக்காது. மத்திய அரசு எங்களை அழிக்கப்பார்க்கிறது. ராம்லீலா மைதானத்திலிருந்து போராட்டக்காரர்களை வெளியேற்ற 5 விதமான சதித்திட்டம் தீட்டியிருந்தனர். மைதானத்திற்குள் வைத்தே என்னை கொன்று விட நினைத்தனர். அதற்காகவே நூற்றுக்கணக்கான கண்ணீர் புகைக்குண்டுகள் வெடிக்கப்பட்டன.நான் இருந்த மேடையும் எரிக்கப்பட்டது. இவ்வாறு பாபா ராம்தேவ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்