முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை சிறையில் வாடும் 4 மீனவர்களை விடுவிக்க வேண்டும் பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

சென்னை, ஜூன்.- 9 - இலங்கை சிறையில் வாடும் 4 தமிழ் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார். அவர் எழுதியுள்ள கடித விவரம் வருமாறு:- கடந்த 1.6.2011 அன்று ராமேஸ்வரம் தங்கு தளத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 707 மீன் பிடி விசைப் படகுகளில், ராமேஸ்வரம் பகுதியினை சேர்ந்த பச 10 ஙஊஆ 581 என்ற விசைப் படகு மற்றும் அதில் மீன் பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் மற்றும் பச 12 ஙஊஆ 252 என்ற விசைப் படகு மற்றும் அதில் மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்களைத் தவிர  இதர படகுகள் மற்றும் மீனவர்களின் கரை திரும்பி விட்டனர். இந்த இரண்டு படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 9 மீனவர்களும், மண்டபம் பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற இன்னொரு மீன் பிடி விசைப் படகான பச09 ஙஊஆ 153 என்ற விசைப் படகும் அதில் மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்களும் கரை திரும்பவில்லை.
ராமேஸ்வரம் பகுதியினைச் சேர்ந்த 2 மீன் பிடி விசைப்படகுகள் மற்றும் அதில் மீன் பிடிக்கச் சென்ற 9 மீனவர்கள் மற்றும் மண்டபம் பகுதியினைச் சேர்ந்த ஒரு மீன் பிடி விசைப் படகு மற்றும் அதில் மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள், ஆக மொத்தம் 13 மீனவர்களையும், 3 விசைப் படகுகளையும் கடலோர காவல் படை மற்றும் இந்திய கப்பற்படை மூலம் கடல் மற்றும் ஆகாய மார்க்கமாகத் தேடி கண்டுபிடிக்க 2.6.2011 அன்று எனது அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடலோரக் காவல் படையினரால் தேடுதல் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்த தருணத்தில், காணாமல் போன மூன்று விசைப் படகுகளில் ராமேஸ்வரம் பகுதியினைச் சேர்ந்த பச 10 ஙஊஆ 581 என்ற விசைப் படகும் அதில் மீன் பிடிப்பு மேற்கொள்ளச் சென்ற 5 மீனவர்களும் மற்றும் மண்டபம் பகுதியினைச் சேர்ந்த பச 09 ஙஊஆ 153 என்ற மீன் பிடி விசைப்படகும் அதிலிருந்த 4 மீனவர்களும், ஆக மொத்தம் 9 மீனவர்களும் மீட்புப் படகுகள் உதவியுடன் 3.6.2011 அன்று காலை பத்திரமாக கரை திரும்பிவிட்டனர்.
ராமேஸ்வரம் பகுதியினைச் சேர்ந்த பச12 ஙஊஆ 252 என்ற பதிவு எண் கொண்ட ஒரு படகு மட்டும் மோசமான பருவ நிலை காரணமாக காற்றின் வேகத்தால் இலங்கையிலுள்ள நெடுந்தீவு அருகிலுள்ள பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டு, அங்கு அப்படகு மூழ்கியதாகவும், அப்படகில் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மூக்குத் துரையின் மகன் ஜெயக்குமார் (25), தேவக்குமார் மகன் பிரபாத் (28), திவ்யநாதன் மகன் சுந்தர் (50), கருப்பையா மகன் மாரிமுத்து (45) ஆகிய நான்கு மீனவர்களும் 8 மணி நேரம் நடுக்கடலில் தத்தளித்து நீந்தி, இலங்கையிலுள்ள நைனாத் தீவில் பத்திரமாக கரை சேர்ந்ததாகவும் தகவல் பெறப்பட்டது.
இந்த நான்கு மீனவர்களும் இலங்கை ஊர்க் காவல் படையினரால் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் பெறப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்திற்குத் தெரிவித்து, இச்செய்தியை உறுதி செய்திடுமாறும், மேற்குறித்த மீனவர்களுக்கு உரிய அனைத்து உதவிகளையும் செய்திடுமாறும், அவர்களை விரைவில் விடுவித்து தமிழகத்திற்கு அனுப்பி வைத்திட உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாற அரசால் 3.6.2011 அன்று நிகரிச் செய்தி அனுப்பட்டது. மேலும், தொலைபேசி மூலமும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த 4 மீனவர்களும் காங்கேசன் துறை நீதிமன்றத்தால் 17.6.2011 வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக 6.6.2011 அன்று இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்திடமிருந்து தொலைபேசி மற்றும் நிகரி மூலம் தகவல் பெறப்பட்டதைத் தொடர்ந்து, நான் பாரதப் பிரதமருக்கு இதுபற்றி கடிதம் அனுப்பியுள்ளேன். நான்கு அப்பாவி மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை வற்புறுத்துமாறு அதில் நான் பிரதமருக்கு கேட்டுக் கொண்டுள்ளேன்.
மீனவர்களின் நலனை பேணிக்காக்கவும், அவர்களின் வாழ்வு மேம்படவும் எனவும் தலைமையிலான அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago