முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராம்தேவ் உடல்நிலை மோசமைடந்தது உண்ணாவிரதத்தை நிறுத்த டாக்டர்கள் அறிவுரை

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

ஹரித்வார்,மே- .9 - ஊழலை எதிர்த்து பாபா ராம்தேவ் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று 5-வது நாளாக நீடித்தது. அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் திரவ உணவை உட்கொள்ளும்படியும் முடிந்தால் உண்ணாவிரதத்தை விரைவில் முடித்துக்கொள்ளும்படியும் டாக்டர்கள் அவருக்கு அறிவுரை கூறியுள்ளனர்.  ஊழலை எதிர்த்தும் ஊழலுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் கொண்டு வர வலியுறுத்தியும் வெளிநாடுகளில் இருந்து கறுப்புப்பணத்தை இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வர வலியுறுத்தியும் யோகா குரு பாபா ராம்தேவ் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார். இந்த போராட்டம் நேற்று 5-வது நாளாக நீடித்தது. டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தபோது போலீசார் தடியடி நடத்தியும் கூட பாபா ராம்தேவ் நேற்று ஹரித்வாரிலும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்தநிலையில் அவரது உடல்நிலை மோசமடைய தொடங்கியது. இதையடுத்து அவர் திரவ உணவாவது உட்கொள்ள வேண்டும் அல்லது விரைவில் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று அவருக்கு டாக்டர்கள் அறிவுரை கூறினார். காரணம் ராம்தேவின் உடல்நலம் படிப்படியாக குறைந்து வருகிறது. அவரது எடையும் குறைந்துவிட்டது. உடம்பில் நீர்சத்து குறைவால் அவர் அவதிப்பட்டு வருகிறார் என்று தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் யோகேஷ் ஷர்மா தெரிவித்தார். ராம்தேவை இவர் அன்றாடம் அருகில் இருந்து கவனித்து  வருகிறார். ராம்தேவை பற்றி கூறிய டாக்டர் ஷர்மா, பால், பலரசம் ஆகியவற்றையாவது பாபா ராம்தேவ் அருந்த வேண்டும் என்று அவரை கேட்டுக்கொண்டியிருக்கிறோம். அவர் உண்ணாவிரதத்தை விரைவில் முடித்துக்கொண்டால் நல்லது என்று அக்கறையோடு தெரிவித்தார். இந்தநிலையில் போலீசாரையும் சமூக விரோதிகளையும் சமாளிக்க 11 ஆயிரம் பேரைக்கொண்ட ஒரு வலிமையான படையை தாம் அமைக்கப் போவதாக பாபா ராம்தேவ் தெரிவித்தார். இதன்பொருட்டு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 20 இளைஞர்கள் வரவேண்டும் என்றும் ராம்தேவ் கேட்டுக்கொண்டார். அவ்வாறு வரும் இளைஞர்களுக்கு வேத சாஸ்திர அடிப்படையிலும் ஆயுத ரீதியாகவும் பயிற்சி அளிக்கப்படும் என்றும் ராம்தேவ் தெரிவித்தார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர் 11 ஆயிரம் பேர் கொண்ட படையை அமைத்தால்தான் அடுத்து எதையும் சமாளிக்க முடியும் என்றும் தெரிவித்தார். இந்த படை ஒரு தற்காப்பு படையே தவிர யாரையும் துன்புறுத்த அல்ல என்றும் ராம்தேவ் விளக்கினார். எங்கள் சீடர்களை இந்த தொண்டர்கள் பாதுகாப்பார்கள். யார் உயிரையும் எடுக்கமாட்டார்கள் என்றும் அவர் வேடிக்கையாக குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago