முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து தீவிரவாத தலைவர்களும் பாக்.கில்தான் இருக்கிறார்கள்- ஹெட்லி தகவல்

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

சிகாகோ,மே.- 9 - லஷ்கர்-இ-தொய்பா உள்பட அனைத்து தீவிரவாத இயக்கங்களின் தலைவர்களும் பாகிஸ்தானில்தான் உலாவிக்கொண்டியிருக்கிறார்கள் என்று தீவிரவாதி டேவிட் ஹெட்லி வாக்குமூலம் அளித்திருப்பதாக சிகாகோ கோர்ர்ட்டில் அமெரிக்க அரசு வழக்கறிஞர் கூறினார்.  மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி டேவிட் ஹெட்லி மற்றும் அவரது கனடா நாட்டு நண்பர் ராணா ஆகியோர் கைது செய்யப்பட்டு அமெரிக்காவில் உள்ள சிகாகோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது சிகாகோ கோர்ட்டில் ராணா மீது இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின்போது அமெரிக்க அரசு சார்பாக வழக்கறிஞர் விக்கி பீட்டர் ஆஜராகி வாதாடி வருகிறார். அவர் நேற்று கூறுகையில் லஷ்கர்-இ-தொய்பா உள்பட அனைத்து தீவிரவாத இயக்கங்களின் தலைவர்களும் பாகிஸ்தானில்தான் உலாவந்து கொண்டியிருக்கிறார்கள் என்று டேவிட் ஹெட்லி வாக்குமூலம் அளித்துள்ளார் என்றார். அந்த தகவலை சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுக்கும் டேவிட் ஹெட்லிக்கும் தொடர்ந்து தகவல் தொடர்பு இருந்துள்ளது. இதை ராணா மூலம் மற்ற தீவிரவாத இயக்கங்களுக்கு ஹெட்லி தெரிவித்துள்ளார் என்றும் வழக்கறிஞர் விக்கி பீட்டர் கூறினார். கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குல் நடத்திய சம்பவத்தில் டேவிட் ஹெட்லியும் ராணாவும் மூளையாக செயல்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் பாகிஸ்தான் நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள். டேவிட் ஹெட்லி, அமெரிக்க குடியுரிமை பெற்று சிகாகோவில் வசித்து வந்தான். ராணா கனடா நாட்டு குடியுரிமை பெற்று அங்கு வர்த்தகம் செய்து வந்தான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்