முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆயிரக்கணக்கானோர்களுடன் அண்ணா ஹசரே உண்ணாவிரதம்

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மே.- 9 - உண்ணாவிரதம் இருந்த இடத்தில் பாபா ராம்தேவ் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபல சமூக சேவகரும் காந்தீயவாதியுமான அண்ணா ஹசரே நேற்று டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் உண்ணாவிரதம் இருந்தார். அவருடன் ஆயிரக்கணக்கானோர் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனர். 

நாட்டில் ஊழலையும் கறுப்புப்பணத்தையும் அடியோடு ஒழிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாபா ராம்தேவ் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதம் இருந்தார். திடீரென்று நள்ளிரவில் போலீசார் புகுந்து பாபா ராம்தேவ் உள்பட அனைவரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். அப்போது தடியடியையும் போலீசார் நடத்தினர். இதில் 60 பேர் படுகாயம் அடைந்தனர். இதைக்கண்டித்து அண்ணாஹசரே நேற்று டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் உண்ணாவிரதம் இருக்கப்படும் என்று அறிவித்தார். அந்த பகுதியில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். அதனால் மகாத்மா காந்தி சமாதி இருக்கும் ராஜ்காட்டில் உண்ணாவிரதம் இருந்தார். அவருடன் ஆயிரக்கணக்கானோர் உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதத்தை மேற்கொள்ளுவதற்கு முன்பு காந்தி சமாதியில் மலர்வளையும் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் நேற்றுக்காலை சரியாக 10.20 மணிக்கு உண்ணாவிரதம் இருக்கும் இடத்திற்கு வந்து உண்ணாவிரதத்தை தொடங்கினார். உண்ணாவிரத்தின்போது பாரத மாதா வாழ்க என்று பலமுறை கூறினார். அதை அங்கு கூடியிருந்தவர்களும் திரும்பக்கூறினர். லோக்பால் வரைவு மசோதா கமிட்டியில் இடம் பெற்றுள்ள சிவில் உறுப்பினர்கள் சாந்தி பூஷண், கிரன்பேடி, சுவாமி அக்னிவேஷ், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனர். நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தவிர உறுப்பினர்கள் அனைவரும் உண்ணாவிரத்தில் கலந்துகொண்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்