முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ்.காப்ரா போர்க்கப்பல் இணைந்தது

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

கொச்சி, ஜூன் - 9 - இந்திய  கடற்படையில் ஏற்கனவே பல புதிய போர்க்கப்பல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இப்போது  ஐ.என். எஸ்.காப்ரா என்ற போர்க்கப்பலும் இந்திய கப்பல் படையில் சேர்க்கப்பட்டுள்ளது. பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய இந்த போர்க்கப்பல்  சிறிய வகை போர்க்கப்பல்கள் வகையைச்  சேர்ந்தது  இந்த கப்பலை கொச்சியில் உள்ள கடற்படை தளத்தில் தென் பிராந்திய கடற்படை  துணை தளபதி  கே.என். சுஷீல்  கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்திய கடற்படைக்கு சிறு போர்களில் ஈடுபடுத்தவும் கடற்கொள்ளையர்களை தடுக்கவும் இதுபோன்ற சிறிய  போர்க்கப்பல்கள் தேவை என்று இவ்விழாவில் பேசிய துணை  தளபதி சுஷில் தெரிவித்தார்.

அந்தமான் நிக்கோபர் தீவுகளில் உள்ள ஒரு முக்கிய தீவின் பெயரை குறிக்கும் வகையில் இந்த கப்பலுக்கு காப்ரா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த போர்க்கப்பல் மணிக்கு 35 கடல் மைல் வேகத்தில் செல்லும் ஆற்றல்மிக்கது.

மீட்பு பணிகளுக்கும் இந்த கப்பல் பயன்படுத்தப்படும் என்றும் கடற்படை அதிகாரிகள்  கூறினர். 

இந்த கப்பல் துவக்க விழாவில் ஏராளமான கடற்படை அதிகாரிகளும் கடற்படை வீரர்களும்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago