முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழை முதியோர்கள் பென்சன் பெற வயது வரம்பு குறைப்பு

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜூன்.10  - வறுமை கோட்டிற்கு கீழே வாழும் முதியோர்கள் பென்சன் பெறும் வயது வரம்பை 60 ஆக மத்திய அரசு குறைத்துள்ளது. இதனால் கூடுதலாக 72.32 லட்சம் பேர் பயனடைவார்கள். நாட்டில் முதியோர்கள் ஏராளமானோர் கைவிடப்பட்டுள்ளனர். அதனால் அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். அதுவும் வறுமை கோட்டிற்கு கீழே வாழும் ஏழை முதியோர்கள் கஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மத்திய அரசு பென்சன் வழங்கி வருகிறது. இந்த வயது வரம்பு தற்போது 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடைபெற்ற கேபினட் அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும் 80 வயதுடைய முதியோர்களுக்கு வழங்கப்படும் பென்சன் ரூ.200-ல் இருந்து 500 ஆக அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் தேசிய சமூக உதவி திட்டத்தின் ஒரு பகுதியான இந்திரா காந்தி தேசிய முதியோர் பென்சன் திட்டத்தின் கீழ் இந்த பென்சன் வழங்கப்படுகிறது. புதிய பென்சன் முறை கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago