முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கச்சத்தீவை மீட்க தமிழக அரசு நடவடிக்கை

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.10 - கச்சதீவை மீட்கக் கோரி அ.தி.மு.க. தொடர்ந்த வழக்குக்கு வலுசேர்க்கும் வகையில் தமிழக அரசின் வருவாய்த் துறையையும் ஒரு மனுதாரராக சேர்க்கவேண்டும் என முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் நேற்று கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (9.6.2011) சட்டமன்றப் பேரவையில், 1960-ம் ஆண்டைய உச்ச நீnullதிமன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் முரணான வகையில் இந்திய நாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய கச்சத்தீவினை இலங்கைக்கு தாரை வார்த்ததை எதிர்த்து 2008-ம் ஆண்டு அ.தி.மு.க. பொதுச் செயலாளரால் உச்ச நீnullதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு வலு சேர்க்கும் விதமாக கச்சத்தீவு குறித்த அனைத்து ஆவணங்களையும் தன் வசம் வைத்துள்ள தமிழ்நாடு அரசின் வருவாயத் துறையை சேர்க்க வலியுறுத்த கோரும் தீர்மானத்தை முன்மொழிந்து ஆற்றிய உரை வருமாறு:-

தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கச்சத்தீவினை, 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் போடப்பட்ட இந்திய  இலங்கை ஒப்பந்தங்களின் மூலம் இலங்கைக்கு தாரை வார்த்ததை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி உச்சநீnullதிமன்றத்தில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் என்ற முறையில் என்னால் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் பின்வரும் தீர்மானத்தினை (இன்று) இப்பேரவையில் நான் முன்மொழிய விழைகிறேன்.

இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு, இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என 1960-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பெருபாரி வழக்கில் தீர்ப்பளித்தது.

ஆனால், உச்சநீnullதிமன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் முரணாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது. இந்த ஒப்பந்தங்கள், சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல என 2008-ம் ஆண்டு உச்சநீnullதிமன்றத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, கச்சத்தீவு குறித்த அனைத்து ஆவணங்களையும் தன் வசம் வைத்துள்ள தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை தன்னை இவ்வழக்கில் சேர்த்துக் கொள்ளும்படி, உச்சநீnullதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை தீர்மானிக்கிறது.

இவ்வாறு தீர்மனத்தை தாக்கல் செய்து ஜெயலலிதா பேசினார்.

இதை தொடர்ந்து தீர்மானத்தை ஆதரித்து எதிர் கட்சித்தலைவர் விஜயகாந்த், சவுந்திரராஜன் (சிபிஎம்), முத்துகுமரன் (சிபிஐ), டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), ஜவாஹிருல்லா (மமக) ஆகியோர் பேசிய பின்னர் விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா பேசிய பின்னர் தீர்மானம் நிறைவேறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago