முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலவச அரிசி வினியோகத்தில் முறைகேடு நடந்தால் கடும் நடவடிக்கை

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.10 - ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி விநியோகத்தில் முறைகேடு நடைபெற்றால் ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுதுறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து விவரம் வருமாறு:-

ஏழை​எளிய மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காக ரேஷன் கடைகளில் 20 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டம் கடந்த 1ந்தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. முதல்​அமைச்சர் ஜெயலிலதா இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இதுவரையில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு பெற்று வந்த மக்கள் தற்போது இலவசமாக பெற்று வருகிறார்கள்.

இந்த திட்டத்தில் முறைகேடு நடக்காமல் இலவச அரிசி ஏழை மக்களுக்கு சென்றடைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்​அமைச்சர் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் இலவச அரிசி முறையாக வழங்கப்படுகிறதா? தரமானதாக வினியோகிக்கப்படுகிறதா? என்பதை அறிய உணவுத் துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி திடீர் சோதனை மேற்கொண்டார்.

சென்னை ஷெனாய்நகர் பெரிவிரிசாலையில் உள்ள அமுதம் நியாய விலைக்கடையில் காலை 8.30 மணிக்கு திடீர் சோதனையில் ஈடுபட்டார். கடை எத்தனை மணிக்கு திறக்கப்பட்டது. பொருட்களின் ஆரம்ப இருப்பு எவ்வளவுப ஸ்டாக் லிஸ்ட் போன்றவற்றை அமைச்சர் ஆய்வு செய்தார். கடை ஊழியரிடம் எடை குறைவாக பொருட்கள் வழங்கக்கூடாது என்று அறிவுறுத்தினார்.

ரேஷன் கடை உரிய நேரத்தில் திறக்கவேண்டும். அரிசியுடன் மற்ற பொருட்களை வாங்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது என்று அறிவுரை வழங்கினார். இலவச அரிசியை கையில் எடுத்து அதன் தரத்தை சோதனை செய்தார். பின்னர் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:​

இலவச அரிசி வழங்கும் திட்டத்தில் எந்த தவறும் நடக்கக்கூடாது என முதல்​ அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அவரது ஆலோசனையின்படி தமிழகம் முழுவதும் இலவச அரிசி வழங்கும் திட்டம் எந்த குறைபாடும் இல்லாமல் செயல்படுகிறது. மேலும் ரேஷன் கடைகளில் அவ்வப்போது திடீர் ஆய்வு நடத்தவேண்டும் என்று முதல்வர் அறிவுரை வழங்கியதன் பேரில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

தரமான அரிசி மக்களுக்கு வழங்கவேண்டும். இந்த திட்டத்தில் தவறு செய்யும் ஊழியர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பச்சரிசி, புழங்கல் அரிசி எது கேட்டாலும் அதை கொடுக்க வேண்டும். கூடுதலாக எந்த பொருளையும் வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது.

70 சதவீத அரிசி குடோன்களில் இருந்து கடைகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் 50 சதவீத இலவச அரிசி வினியோகிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் 30 சதவீத அரிசி வழங்கப்பட்டுள்ளது. எல்லா நாட்களிலும் அரிசியை மக்கள் பெற்றுக்கொள்ளலாம். எடை குறைவாகவோ முறைகேடு செய்தாலோ புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது உணவு வழங்கல்துறை ஆணையாளர் கே. பாலச்சந்திரன், துணை கமிஷனர் வனிதா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago