முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தரம் குறைந்ததாக இருந்ததால் புதிய சட்டசபையில் சபை நடத்தவில்லை

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூன்.10 - புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டப்பட்டத்தில் நடந்தது முறைகேடு மட்டுமல்ல தரம் குறைந்த கட்டிடமாகவும் இருந்ததால் அங்கு சபை நடத்தவில்லை என்ற நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றும்போது புதிய சட்டமன்றத்தை விட்டு பழைய சட்டமன்றத்தில் நாம் சபை நடத்துகிறோம். புதிய தலைமை செயலக கட்டிட பணிகளை நிறுத்தி வைத்து விசாரிக்க விசாரணை குழு அமைத்துள்ளீர்கள். அதுவரை அந்த புதிய சட்டமன்ற கட்டிடத்திலேயே சபையை நடத்தலாமே பொதுமக்களும் நமது வரிப்பணம் ரூ.800 கோடிபோட்டு கட்டப்பட்ட சபை சும்மா இருக்கிறதே என்று கேட்கிறார்கள் என்றார்.

அப்போது குறுக்கீட்டு பேசிய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் வந்ததால் பணிகள் நிறுத்தப்பட்டு முறைகேடுகளை விசாரிக்க குழுவும் போடப்பட்டது. விசாரணை நடத்தப்பட்டு விசாரணை முடிவில் அந்த முடிவு அடிப்படையில் அந்த கட்டிடத்தை எப்படி பயன்படுத்துவது என்று முதல்வர் முடிவு செய்வார் என்றார்.

பின்பு பேசிய பாலபாரதி அதுவரை அங்கு சபை நடத்தலாமே அங்கு போட்டி சட்டமன்றம் நடத்தியதால் தான் நீங்கள் நிஜ சபாநாயகராக ஆகியுள்ளீர்கள் என்றபோது குறுக்கீட்டு பேசிய நிதியமைச்சர் பன்னீர்செல்வம் அந்த கட்டிடம் கட்டுவதில் முறைகேடு நடைபெற்றதால் மட்டும் இந்த முடிவு எடுக்கப்படவில்லை. தரமற்றதாகவும் இருப்பதும் காரணம் தரம் குறைவான கட்டிடத்தில் பிரச்சினை வந்தால் அதற்கும் பதிலளிக்கவேண்டியிருக்கும் என்றார்.

அப்போது பேசிய வேளாண்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் புதிய தலைமை செயலகம் திறப்பு விழா முடிந்ததும் ஓராண்டாக கட்டி கொண்டிருக்கிறார்கள். இன்னும் முடியவில்லையே ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்