முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்வெட்டு 2 மணி நேரமாக குறைக்கப்படும் சட்டப்பேரவையில் ஜெயலலிதா அறிவிப்பு

சனிக்கிழமை, 11 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.- 11 - தமிழகத்தில் தற்போது உள்ள 3 மணி நேர மின்வெட்டு 2 மணி நேரமாக குறைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார். நேற்று சட்டப்பேரவையில்  ஆளுநர் உரைக்கு நன்றி கூறும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு ஜெயலலிதா அளித்த பதில் வருமாறு:- இங்கே பேசிய மாண்புமிகு உறுப்பினர்கள் பலரும் தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறை சூழ்நிலை பற்றி கருத்து தெரிவித்தார்கள்.
கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தின் மின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து, மக்களுக்கு எவ்வளவு நேரம் மின்சாரம் கிடைக்கும் என்பதே தெரியாத ஒரு நிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டனர்.
சென்னை மாநகரில் ஒரு மணி நேரம், மாநிலத்தின் இதரப் பகுதிகளில், மூன்று மணி நேரம் மின் தடை என முந்தைய தி.மு.க. அரசு அறிவித்தது. ஆனால், உண்மையில், அதற்கு மேலும் அறிவிக்கப்படாத மின் தடையாக மேலும் 2, 3 மணி நேரம் எல்லா பகுதிகளிலும் மின் தடை இருந்தது என்பதை தமிழக மக்கள் அனைவரும் அறிவர். மேலும், தொழிற்சாலைகளுக்கு 20 சதவீதம் மின் வெட்டும் மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான உச்ச மின் தேவை காலத்தில் 90 சதவீதம் மின் வெட்டும் அமல்படுத்தப்பட்டது. தேவைக்கேற்ப மின் திட்டங்களை ஏற்படுத்தாததும், நிருவாக சீர்கேடுகளும் தான் இவ்வாறு மின் வெட்டு ஏற்பட முக்கியக் காரணம் ஆகும். கடந்த ஐந்தாண்டு முழுமையும், இவற்றை எல்லாம் மறைத்து, முந்தைய எனது ஆட்சிக் காலத்தில் திட்டங்கள் தீட்டப்படாதது தான் மின் வெட்டுக்குக் காரணம் என உண்மைக்கு மாறான செய்தியை முந்தைய
தி.மு.க. அரசு பரப்பி வந்தது.
ஆனால், உண்மை நிலை என்னவென்றால், எனது முந்தைய ஆட்சிக் காலத்தில், வடசென்னை அருகில், வல்லூரில் 1000 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை தேசிய மின் கழகத்துடன் இணைந்து நிறுவ 12.07.2002 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதே போன்று, தூத்துக்குடியில் 1000 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தோடு கூட்டு முயற்சியில் நிறுவ 19.06.2003 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த இரு மின் திட்டங்களுக்கு தேவையான நிலங்கள் ஒதுக்கீடு பெறவும், பல்வேறு அனுமதிகளைப் பெற ஆய்வுகள் நடத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், வைகை படுகையில் உள்ள இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தி வழுதூரில், 95 மெகாவாட் திறன் கொண்ட புதிய எரிவாயு சுழலி மின் நிலையத்தை அமைக்கத் தேவையான நடவடிக்கைகளை எனது அரசு மேற்கொண்டது. 29.9.2004 அன்று இந்த மின் நிலையத்திற்கு தேவையான எரிவாயுவை வழங்குவதற்கு இந்திய எரிவாயு ஆணையத்தோடு
ஒப்பந்தமும் கையெழுத்தானது. மார்ச் 2006ல், இதற்குண்டான ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்து ஒப்பந்தமும் வழங்கும் இறுதி நிலையில் இருந்தது.
வட சென்னை அனல் மின் நிலையத்தில் போதுமான நிலம் இருந்ததால் அங்கு 500 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் திட்டத்தை நிறுவ 12.12.2005 அன்று ஒப்புதல் வழங்கப்பட்டது.
500 மெகாவாட் திறன் கொண்ட குந்தா நீnullரேற்று மின் நிலையம் அமைத்திடுவதற்கான கருத்துரு அரசால் ஒப்புக் கொள்ளப்பட்டு, தமிழ்நாடு மின்சார வாரியம் முதற்கட்ட பணிகளான காடுகளின் நில அளவை போன்ற பணிகளை 8.9.2005 அன்று முதல் துவக்கியது.
எனது அரசு மேற்கொண்ட முயற்சிகளை அதற்குப் பின் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு, தொடர்ந்திருந்தால் தற்போது மாநிலத்தில் நிலவும் மின் தட்டுப்பாட்டை சுலபமாக தவிர்த்திருக்க முடியும்.
குறைந்த விலையில் அதிக மின் உற்பத்தி ஏற்படுத்த பல மாநிலங்களில் 4000 மெகாவாட் திறனுடைய பிரம்மாண்ட மின் திட்டங்களை அதாவது, மங்சிஙுஹ ஙடீகிஹ டச்சூடீஙு டஙுச்குடீஷசிகளை நிறுவுவதற்கு 2006-ல் இந்திய அரசு ஒரு கொள்கையை அறிவித்தது. தமிழ்நாட்டிலும், 2 பிரம்மாண்ட மின் உற்பத்தித் திட்டங்களை நிறுவ அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், இத்திட்டங்கள் அமைவதற்கான இடங்களைத் தெரிவு செய்ய முந்தைய தி.மு.க. அரசு காலதாமதம் செய்ததால் இத்திட்டங்கள் இன்னமும் தொடங்கப் பெறாமல் உள்ளன. இந்திய அரசின் தொடர் வலியுறுத்தலின் காரணமாக 31.3.2008 அன்று, அதாவது, கிட்டத்தட்ட ஒன்றரை வருட கால தாமதத்திற்குப் பிறகு செய்யூரில் பிரமாண்ட மின் திட்டத்தை நிறுவ தமிழ்நாடு அரசு, அதாவது, தி.மு.க. அரசு ஒப்புதல் அளித்தது. அப்பொழுதும், தமிழ்நாடு அரசால் ஷஹஙீசிடுசுடீ துறைமுகத்தை உறுதி செய்ய முடியாமல் அதன் பிறகு அக்டோபர் 2009ல்
மட்டுமே முடிவெடுக்க முடிந்தது. எனவே, கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் இந்தக் காரணத்தால் வீணானது. இரண்டாவது இடத்திற்கு இந்திய அரசால் இன்னமும் ஒப்புதல் வழங்கப்படாமல் உள்ளது.
மின் உற்பத்தி நிலையங்களை முந்தைய தி.மு.க. அரசு சரிவர நிர்வகிக்காததால் மின் உற்பத்தி இழப்பு ஏற்பட்டது. 2001 முதல் 2006 வரையிலான காலகட்டத்தில், அதாவது, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், நம்முடைய அனல் மின் நிலையங்கள் முறையான
பராமரிப்பினாலும், தகுந்த கண்காணிப்பினாலும் மிக நன்றாக செயல்பட்டு, மத்திய எரிசக்தி துறையினுடைய சிறந்த உற்பத்தித் திறனுக்கான தேசிய விருதுகளைப் பெற்றன. ஆனால், 2006 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில், அதாவது, தி.மு.க. ஆட்சிக் காலத்தில், எந்த விதமான விருதையும் இந்த அனல் மின் நிலையங்கள் பெறவில்லை.
6000 மெகாவாட்டிற்கும் அதிகமான காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் தமிழகத்தில் உள்ளன. ஆனால், அந்த மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கான மின் தொடரமைப்பு வசதி இல்லாததால், காற்றாலைகள் மூலம் பெறப்படும் மின்சாரத்தை முழுமையாகப் பெற இயலவில்லை. தேவையான மின்தொடர் கட்டமைப்பு வசதிகளை எனது அரசு விரைவில் ஏற்படுத்தும்.
பழுதடைந்த நிலையில் உள்ள மின் நிலையங்களை உடனே சரி செய்ய போர்க்கால அடிப்படையில் எனது அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஜனவரி 2010 முதல் பழுதடைந்த நிலையில் இருந்த வழுதூர் எரிவாயு சுழலி மின் நிலையம், நாங்கள் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பின்னர் இந்த ஜூன் மாதம் மீண்டும் இயக்கி வைக்கப்பட்டது. இதே போன்று, ஓராண்டு காலமாக பழுதடைந்த நிலையில் இருந்த குத்தாலம் எரிவாயு சுழலி மின் நிலையமும் இந்த மாதம் செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தலைவர் ! இந்த இரண்டு மின் திட்டங்களும் ஓராண்டு காலமாக பழுதடைந்த நிலையில் இருந்தும், அவற்றை சரி செய்ய தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்து இரண்டே வார காலத்திற்குள் இவற்றை சரி செய்து, இவை இரண்டும் இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
முந்தைய தி.மு.க. அரசின் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் கடலூர் பவர் கம்பெனி என்கின்ற நிறுவனத்துடன் 1320 மெகாவாட் அனல் மின் திட்டத்தை நிறுவ 28.09.2006 அன்று மின் கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்திட்டது. இத்திட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மின் உற்பத்தி முழுமையாக தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.
திறமையற்ற நிர்வாக முடிவுகளினாலும், நிலக்கரி விநியோகிக்கும் நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பு அற்ற செயல்களாலும் நிலக்கரி இடப் பெயர்வு மேலாண்மை பாதிக்கப்பட்டது. இதனால், பல நேரங்களில் நிலக்கரி தட்டுப்பாட்டின் காரணமாக, தூத்துக்குடி, மேட்டூர், வட சென்னை மற்றும் எண்ணூர், அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது.
எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் 2,518 மெகாவாட் மின் நிறுவு திறன் கூடுதலாக நிறுவப்பட்டது. ஆனால், முந்தைய தி.மு.க. ஆட்சியில் வெறும் 206 மெகாவாட் மட்டுமே நிறுவு திறன் அதிகரிக்கப்பட்டது. இதே போன்று, எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் 2,595 மெகாவாட் கூடுதல் மின் திட்டங்கள் நிறுவுவதற்கு வழிவகை செய்யப்பட்டது.
முந்தைய தி.மு.க. அரசு மின் தட்டுப்பாட்டை போக்குவதற்காக வியாபாரிகளிடமிருந்தும், மின் சந்தையிலிருந்தும், மின் திருப்புதல் முறையிலும், மின் கொள்முதல் செய்து வந்தது. இதில் மின் கொள்முதலுக்காக சராசரியாக, யூனிட் ஒன்றுக்கு 5 ரூபாய் 50 பைசா வரை செலவிடப்பட்டது. ஆனால், இந்திய மின்சார சட்டம், 2003-ன்படி, நீnullண்ட கால கொள்முதல் முறையான இஹஙூடீ​1 ஸடுக்ஷக்ஷடுடூகி  மூலம் மின் கொள்முதல் கொள்கை நடைமுறைப் படுத்தப்பட்டிருந்தால் ஏற்கெனவே மின் கொள்முதல் செய்த
விலையில் பாதி விலைக்கே மின் கொள்முதல் செய்திருக்க முடியும்.
தற்போது மாநிலத்தில் நிலவும் மின் பற்றாக்குறை நிலையை மாற்றி அமைக்க குறுகிய கால மற்றும் nullண்ட கால திட்டங்களின் அடிப்படையில் எனது அரசு பல்வேறு முயற்சிகளை எடுக்கும். நான் ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல பழுதடைந்த மின் நிலையங்கள் உடனடியாக சீரமைக்கப்பட்டுள்ளன. குறுகிய கால மற்றும் nullநீண்ட கால மின் கொள்முதல் முறையை இணைத்து
லாபகரமான மற்றும் நிலையான மின் கொள்முதல் கொள்கையை எனது அரசு கடைபிடிக்கும். அடுத்த ஐந்தாண்டுகளில், மின் வாரியத்தின் நிறுவு திறன் மேலும் 10,000 மெகா வாட்டிற்கும் அதிகமாக அதிகரிக்க, நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போது, எனது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளின் காரணமாக அறிவிக்கப்படாத மின் வெட்டுகள் நிறுத்தப்பட்டு விட்டன. மேலும், வரும் ஜூலை மாதம் முதல் தமிழ்நாட்டில் தற்போதுள்ள 3 மணி நேர மின் வெட்டு 2 மணி நேரமாகக் குறைக்கப்படும். படிப்படியாக, மின் வெட்டே இல்லா மாநிலமாக தமிழகம் விரைவில் மாறும் என்பதை இந்த அவையில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
2001 முதல் 2006 வரையிலான எனது ஆட்சிக் காலத்தில், 2006-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை தமிழ்நாடு மின் வெட்டே இல்லாத மாநிலமாகத் தான் இருந்தது. இன்னும் அதிகமான மின் நிறுவுத் திறனுடன் அதைவிட சுபிட்சமான நிலையை இந்த ஆட்சிக் காலத்தில் அடைவோம் என்று உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது பதிலுரையில் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago