முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதி ராணா மீதான வழக்கில் அமெரிக்க கோர்ட்டின் தீர்ப்பு

சனிக்கிழமை, 11 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூன்.- 11 - தீவிரவாதி ராணா மீதான வழக்கில் அமெரிக்க கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பானது இந்தியாவுக்கு பின்னடைவு அல்ல என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட கனடா நாட்டுக்காரன் தீவிரவாதி ராணாவுக்கும் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி நடந்த குண்டுவெடிப்புக்கும் தொடர்பு உள்ளது என்று அமெரிக்கா அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு அமெரிக்காவில் உள்ள சிகாகோ கோர்ட்டில் நடந்தது. விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. அதில் ராணாவுக்கும் மும்பை குண்டுவெடிப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று நீதிபதி கூறியுள்ளார். இதனால் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இதை மத்திய அரசு மறுத்துள்ளது. ராணா வழக்கில் அமெரிக்க கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பானது இந்தியாவுக்கு பின்னடைவு என்று கூற முடியாது. வெளிநாடுகளில் தீவிரவாதிகள் குறித்த வழக்குகளை இந்தியா சார்ந்து இல்லை என்று மத்திய உள்துறை விவகாரத்துறையை சேர்ந்த செயலாளர் யு.கே. பன்சால் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். ராணா மீது இந்தியாவில் இன்னும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அதனால் அமெரிக்க கோர்ட்டின் இந்த தீர்ப்பானது ஒரு பின்னடைவு என்று நான் கருதவில்லை. தீவிரவாதிகள் ராணா மற்றும் டேவிட் ஹெட்லி இந்திய புலனாய்வு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் விசாரணையைத்தான் இந்தியா சார்ந்திருக்கிறது. தீவிரவாதத்தை இந்தியா கையாளுவதில் வேறுநாடுகளை சார்ந்து இருக்கவில்லை. நாம் நம்முடைய பலத்தைத்தான் சார்ந்து இருக்கிறோம். ராணா மற்றும் ஹெட்லி மீது இந்திய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை அடிப்படையில் கோர்ட்டுக்கு மத்திய அரசு செல்லும் என்றும் பன்சால் மேலும் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்