முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிமுகம்- ஜெயலலிதா அறிவிப்பு

சனிக்கிழமை, 11 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.- 11 - தமிழகத்தில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார். நேற்று சட்டப்பேரவையில்  ஆளுநர் உரைக்கு நன்றி கூறும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு ஜெயலலிதா அளித்த பதில் வருமாறு:- ஊரக வீட்டு வசதித் திட்டம் பற்றி சில கருத்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன். முந்தைய அரசால் செயல்படுத்தப்பட்டு வந்த ஊரக வீட்டு வசதித் திட்டம் கைவிடப்படுவதைப் பற்றி இங்கே சில உறுப்பினர்கள் குறிப்பிட்டார்கள். கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வந்த ஊரக வீட்டு வசதித் திட்டம் பல குறைபாடுகளைக் கொண்டது. அத்திட்டத்தில் வழங்கப்படும் மானியமான 75 ஆயிரம் ரூபாயில் ஏழை எளிய குடும்பங்கள் வீடு கட்ட இயலாத நிலையிலேயே இருந்தனர். கட்டுமானச் செலவு இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகரித்து விட்ட நிலையில், ஏழைக் குடும்பங்கள் கடன் வாங்கித் தான் வீடு கட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். கடன் சுமை இல்லாத வகையில் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு வீட்டு வசதி செய்து தரப்பட வேண்டும் என்பதால், சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும். இந்த திட்டத்தின் படி, சுமார் 300 சதுர அடி அளவில் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் அரசே வீடு கட்டி கொடுக்கும். அதைப் போலவே, நகர்ப்புற ஏழைகளின் வீட்டு வசதிக்காக ஒரு திட்டம் செயல்படுத்தப்படும்.
அனைவருக்கும் பயனளிக்கக் கூடிய, தரமான மருத்துவச் சேவையை வழங்குவதே இந்த அரசின் குறிக்கோளாகும். முந்தைய அரசால் செயல்படுத்தப்பட்டு வந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அனைவருக்கும் பயன்படக் கூடிய வகையில் அமையப் பெறவில்லை. அந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நான்கு ஆண்டுகளுக்கு அனுமதிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகை ஒரு லட்ச ரூபாய் ஆகும். குடும்பத்திலுள்ள ஒரு நபர் இந்தத் திட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள முழு காப்பீட்டுத் தொகையையும் பயன்படுத்தி விட்டால், அவரோ அல்லது அவரது மற்ற குடும்ப உறுப்பினர்களோ திட்டம் அமலில் உள்ள நான்கு ஆண்டுகளுக்கு இத்திட்டத்தின் மூலம் எந்தப் பயனையும் பெற இயலாது. மேலும், அனுமதிக்கப்பட்டுள்ள காப்பீட்டுத் தொகையான ஒரு லட்ச ரூபாய், சில உயிர் காக்கும் பெரிய அறுவை சிகிச்சைகளுக்குப் போதுமானதாக இல்லை. இந்தத் திட்டத்தில் மருத்துவப் பரிசோதனைகளுக்கான கட்டணங்களை வழங்கவும் வழி இல்லை. நஷஹடூ போன்ற அதிக செலவு ஏற்படும் பரிசோதனைகளுக்குக் கூட இந்தத் திட்டத்தில் கட்டணங்கள் வழங்க இயலாது. இதனால் ஏழை நோயாளிகள் மருத்துவ பரிசோதனைகளுக்காக கடன் வாங்கித் தான் செலவழிக்கும் நிலை உள்ளது. மேலும், சிறுnullரக மாற்று அறுவை சிகிச்சை போன்ற அறுவை சிகிச்சைகளுக்குத் தேவைப்படும் பிந்தைய பாதுகாப்பு மற்றும் தொடர் மருத்துவ சிகிச்சை வழங்க இந்தத் திட்டத்தில் வழிவகை இல்லை.
காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், நோயாளிகள் அறுவை சிகிச்சை மேற்கொண்டாலும், அதில் சேர்க்கப்படாத இனங்களுக்கான கட்டணங்களை தனியார் மருத்துவமனைகள் பயனாளிகளிடம் இருந்தே பெற்றன. சில தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளிடம் பணம் வசூல் செய்தல் போன்ற முறைகேடுகளிலும் ஈடுபட்டன. அரசு மருத்துவமனைகளில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் பணம் வழங்கப்பட வேண்டும் எனினும் இது வரை வழங்கப்பட்ட மொத்த
காப்பீட்டுத் தொகையான 850 கோடி ரூபாயில், அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட தொகை வெறும் 10 கோடியே 49 லட்ச ரூபாய் தான். அதாவது, 1.2 சதவீதத் தொகையே அரசு மருத்துவமனைகளுக்குச் சென்றுள்ளது. மொத்தத்தில், இந்த காப்பீட்டுத் திட்டம், தனியார் மருத்துவமனைகள் அதிகம் வளர்ச்சி அடையவே பயன்பட்டது. எனவே தான், இந்தத் திட்டத்தை
கைவிட இந்த அரசு முடிவு செய்துள்ளது. அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை வழங்கும் நோக்கத்தை எட்டக் கூடிய வகையில், ஒரு புதிய பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை இந்த அரசு அறிமுகப்படுத்தி அனைவரும் தங்களுக்குத் தேவையான மருத்துவ வசதி பெறுவதை உறுதி செய்யும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்