முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழைக்கு தங்கம் எதிரிக்கு சிங்கம்: ஜெயலலிதா பற்றி வைகைச்செல்வன் வர்ணணை

சனிக்கிழமை, 11 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.- 11 - ஏழைக்கு தங்கம் எதிர்க்கும் சிங்கம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை வைகைச் செல்வம் எம்.எல்.ஏ. வர்ணித்து பேசினர். சட்டசபையில் நேற்று அருப்புக்கோட்டை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வைகை செல்வன் இலக்கிய கலை நயத்துடன் சங்ககால பாடல்களை உவமையுடன் விளக்கி மிக அழகாக பேசினார். அவரது பேச்சை முதல்​அமைச்சர் ஜெயலலிதா உள்பட அனைவரும் ரசித்து கேட்டனர். அவரது பேச்சு வருமாறு:

நான் பிறந்தது திருமங்கலம், வசிப்பது மயிலாப்nullர், தேர்தலில் வெற்றி பெற்று வந்தது அருப்புக்கோட்டை அங்கு ஒரு தீய சக்தியை தோற்கடித்து வா என்று என்னை நிறுத்தி, ஏழை எளிய சாதாரண தொண்டனும் எம்.எல்.ஏ. ஆக முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர்  ஙீஜெயலலிதா. ஏழைப் பெண்களின் தாலிக்கு தங்கம் கொடுத்து ஏழைகளின் கண்ணீரை துடைத்தவர் எங்கள் அம்மா, ஏழைக்கு தங்கமாகவும், எதிரிக்கு சிங்கமாகவும் விளங்குபவர். 

சட்டம் ​ ஒழுங்கு என்று சொன்னால் அதற்கு சரியான முதல்​அமைச்சர் ஜெயலலிதா தான் என்று  மக்கள் கருதுகிறார்கள். கடந்த ஆட்சி காலத்தில் செம்மொழி மாநாடு நடத்தி தனது குடும்ப உறுப்பினர்களை முதல் 10 வரிசையில் ஒட்டு மொத்தமாக அமரச் செய்தவர் கருணாநிதி. தமிழ் மொழிக்கு எதுவும் செய்யாமல் தமிழ் மொழியை வைத்து பிழைத்தது கருணாநிதி குடும்பம். தமிழ்நாட்டின் பாரம்பரியத்துக்கு எடுத்துக்காட்டு கட்டிடக்கலையாகும். தஞ்சை பெரிய கோவில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில்களில் கட்டிட கலையின் வெளிப்பாடுகளை காணலாம். ஆனால் கட்டிட கலையை கொச்சை படுத்தும் வகையில் புதிய தலைமை செயலக கட்டிடத்தை முன்னாள் முதல்வர் உருவாக்கியுள்ளார். பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனி போல் அதை கட்டி உள்ளார். வட மாநிலத்தில் இருந்து ஆட்களை கொண்டு வந்து அவர்களை வதைத்து அந்த கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. அங்கு நடந்த பல விபத்துக்கள் மரணங்கள் மறைக்கப்பட்டுள்ளன. ரூ.2 கோடிக்கு புதிய தலைமை செயலக கோபுரத்தில் செட் போட்டு வீணடித்துள்ளனர். அதனால்தான் nullநீதி விசாரணைக்கு முதல்​அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அவசர கோலத்தில் அள்ளித் தெளித்தது தி.மு.க. அரசு. கூடா நட்பு கேடாய் முடியும் என்று சொல்கிறார். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதை கருணாநிதி தெரிந்து கொண்டார். 

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்