முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கச்சத்தீவை திரும்ப பெறவேண்டும் சட்டசபையில் சரத்குமார் வலியுறுத்தல்

சனிக்கிழமை, 11 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.- 10 - இலங்கை கம்பத்தோட்டாவில் உள்ள துறைமுகம் சீனாவிற்கு சொந்தமானது மற்ற நாடுகளின் தளமும் அங்கு உள்ளது. ஆகவே நம் நாட்டின் பாதுகாப்பு கருதி கச்சத்தீவை திரும்ப பெறவேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்  சட்டபேரவையில் வலியுறுத்தினார். கச்சத்தீவை திரும்ப பெறும் தீர்மானத்தின் மீது சரத்குமார் பேசியதாவது:- தமிழகத்தின் தலைசிறந்த சுற்றுலாத் தலங்களுள் ஒன்றான குற்றாலத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். வெளி நாட்டவரை கவரும் வகையில் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக அமைய குற்றாத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகல் மேம்படுத்தப்பட வேண்டும். இயற்கை வளம்மிக்க சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து வசதி, கழிப்பிட வசதிகள், நவீன தங்கும் வசதி போன்றவை ஏற்படுத்த வேண்டும். சுற்றுலா மேம்பாட்டுக் குழு அமைத்து, இப்பகுதியின் வளர்ச்சிக்கு ஆலோசனைகள் பெறப்பட்டு செயல்படுத்த வேண்டும். சீசன் காலத்தில் தென்காசிக்கு கூடுதல் ரயில்கள் இயக்க மத்திய ரயில்வே துறையை தமிழக அரசு வலியுறுத்தவேண்டும். அதோடு பகீடீஙிடீ ஙீஹஙுகூ, சூடீங்ங்டூடீஙூஙூ சிச்சீஙுடுஙூசீஙி (மருத்துவ சுற்றுலா), பஙுடீகூகூடுடூகி (மலையேற்றம்) போன்றவற்றை ஊக்குவிக்க வேண்டும். இது நம் நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கவர்ந்து வருவாய் ஈட்டி தருவதோடு அப்பகுதிகளில் நேர்முக மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளும் பெருக வாய்ப்பு உருவாகும்.
வேளாண் துறையில் நீடித்த, நிலையான (நசீஙூசிஹடுடூடீக்ஷ ஹடூக்ஷ ஙீடீஙுஙிஹடூடீடூசி கிஙுச்சூசிகீ) வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதை யாராலும் வரவேற்காமல் இருக்க முடியாது. மாநில நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தி நீர்ப்பாசன ஆதாரத்தை பெருக்க அரசு மேற்கொள்ள இருக்கும் திட்டம் வேளாண் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலிம் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி (கஹஙீசிச்ஙீ) வழங்கவிருப்பது, உள்ளூர் கேபிள் டி.வி. இயக்குபவர்களை பாதிக்காத வகையில் தனியார் கேபிள் டி.வி. சேவை அரசுடமையாக்குவது, மகளிருக்கு மின் விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் இலவசமாக வழங்குவது உள்ளிட்ட திட்டங்கள் வரவேற்கத்தக்கது.
கடந்த 7-ம் தேதி சமச்சீர் கல்வி குறித்த சட்ட முன்வடிவின்படி, பாடத் திட்டங்களின் தரம் உயர்த்த தமிழக அரசு வல்லுநர் குழு அமைத்திருப்பதை வரவேற்கிறேன். கல்வியின் தரம் உயரவேண்டிய அளவு மாணவர்களின் தரம், ஆசிரியர்களின் தரம் மற்றும் பள்ளிகளின் தரம் ஆகியவையும் உயரவேண்டும்.
ஒரே பாடத்திட்டம் அமைந்தாலும் மாணவர்களிடையே பல தரப்பட்ட இடைவெளிகள் நிலவுவதைக் காணமுடிகிறது.குறிப்பாக கிராமப்புற - நகர்ப்புற மாணவர்களிடையே உள்ள இடைவெளி தனியார் - அரசு பள்ளி மாணர்களிடையே இடைவெளி (இச்டூக்டுக்ஷடீடூஷடீ ங்டீசுடீங், உடூகிங்டுஙூகீ ஓடூச்சூங்டீக்ஷகிடீ, இச்ஙிஙிசீடூடுஷஹசிடுச்டூ ஙூகூடுங்ங்ஙூ டீசிஷ) போன்றவை களையப்பட வேண்டுமானால், ஆசிரியர்களின் தரம்,பள்ளிகளின் தரமான கட்டமைப்பு வசதி, நூலகம், ஆய்வுக் கூடங்கள், விளையாட்டு மைதானம், கழிவறை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி மற்றும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். கல்வி வளர்ச்சியில் தமிழகத்தை அனைத்து மாநிலங்களுக்கும் முன் மாதிரியாக திகழச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
தென்காசியில் பல ஆண்டு கோரிக்கையாக உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க முதல்வர் கேட்டுக் கொள்கிறேன். சட்டத்துறை அமைச்சரும் இத்தொகுதியின் சொந்த ஊர்க்காரராக இருப்பதால் அவரும் இதுகுறித்து மனதில் கொள்வார் என்று நம்புகிறேன்.
முதல்வர் உடனடியாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது. தென்காசி தலைமை அரசு மருத்துவமனை மேம்பாடு குறித்துத்தான். நான் சில நாட்களுக்கு முன்பு இம்மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தபோது மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதையும், நரம்பியல், இதய நோய், சிறுநீரக நோய் போன்ற சிறப்பு சிகிச்சைகளுக்கான மருத்துவர்கள் (நஙீடீஷடுஹங்சிநீ ஈச்ஷச்சிச்ஙுஙூ) இல்லாததையும், இ.ப. நஷஹ, ஐஇம மடூடுசி, ஈடுஹங்நீஙூடுஙூ மடூடுசி உள்ளிட்ட வசதிகள் இல்லாததையும் கேட்டு அறிந்தேன். இதனால் விபத்து, தீ விபத்து போன்ற அவசர சிகிச்சை பெற வரும் நோயாளிகள் திருநெல்வேலிக்கு திருப்பி விடப்படுவதால், வழியிலேயே உயிரிழக்கும் பரிதாப நிலை இருப்பதும் தெரியவந்தது. எனவே அரசு உடனடியாக இக்குறைபாடுகளை நீக்க உத்தரவிட்டு, தென்காசி அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்தி நல்ல சிகிச்சை கிடைக்கச் செய்யவேண்டும். எண்ணிக்கை குறைவாக உள்ள மருத்துவர்களை உடனே நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இம்மருத்துவமனை அமைந்திருக்கும் 36 ஏக்கர் நிலப்பரப்பு மருத்துவக் கல்லூரி கட்டும் அளவிற்கு இருப்பதால் அரசு அங்கு மருத்துவக் கல்லூரி கட்டுவது குறித்து பரிசீலிக்க வேண்டுகிறேன்.
இலங்கை கம்பந்தோட்டாவில் உள்ள துறைமுகம் சீனாவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்திற்கு கீழும் சீன துறைமுகம் உள்ளது. ஆகவே அண்டை நாடுகள் அச்சுறுத்தலிருந்து பாதுகாக்க பாதுகாப்பு கருதி கச்சத்தீவை திரும்ப பெறவேண்டும்.
இவ்வாறு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்