முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாட்டுத்தாவணி பஸ் நிலைய நிர்வாகத்தை மாவட்ட நிர்வாகம் எடுத்துக்கொள்ளும்-கலெக்டர் சகாயம்

சனிக்கிழமை, 11 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஜூன்.- 11 - மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் ஒரு வாரத்துக்குள்  அடிப்படை வசதிகளைச் செய்யாவிட்டால் பஸ் நிலைய நிர்வாகத்தை மாவட்ட நிர்வாகம் எடுத்துக்கொள்ளும் என கலெக்டர் சகாயம் அறிவித்துள்ளார். இது குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கடந்த 4-ம் தேதி நான் (கலெக்டர்) மற்றும் துறை அலுவலர்களும் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தை ஆய்வு செய்தோம்.  அப்போது இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் போதிய அளவு கூரை வசதி இல்லை. கட்டணம் செலுத்திய வாகனங்கள் அனைத்தும் திறந்த வெளியில் பாதுகாப்பின்றி நிறுத்தப்பட்டிருந்தன. கழிவறை, குளியலறை ஆகியனபோதிய சுத்தமின்றி சுகாதாரக் கேடு விளைவிக்கும் வகையில் பராமரிப்பு இல்லாமல் இருந்தது, மேலும் அங்கு அனுமதிக்கப்பட்ட கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக வசூலித்தது கண்டுபிடிக்கப்பட்டது. பஸ் நிலையத்தின் நடைமேடைகளில் உரிமமின்றி கடைகள் நடத்தப்பட்டதோடு பயணிகள் நடக்க முடியாத அளவுக்கு பூ மற்றும் பலகாரக்கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. பஸ் நிலையத்தில் சுத்தம் செய்யும் பணிமுறையாக மேற்கொள்ளவில்லை. இதனால் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் வகையில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கிக் கிடந்தன. அங்குள்ள கடைகளுக்கு கடந்த 2005 -ம் ஆண்டிலிருந்து உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்தக் குறைகளையெல்லாம் வரும் 7 தினங்களுக்குள் சரி செய்யவேண்டும். தவறும் பட்சத்தில் தமிழ்நாடு மோட்டார் வாகன விதி எண் 245 (1)ன் படி பஸ் நிலைய நிர்வாகத்தை அரசு ஏற்றுக்கொள்ளும் எனத்தெரிவித்துக்கொள்கிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்