முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க தீர்மானம் நிறைவேற்றிய முதல்வரை பாராட்டுகிறேன்- திருமாளவன் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2011      தமிழகம்

மதுரை,ஜூன்.- 12 - இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டுவதாக மதுரையில் திருமாளவன் தெரிவித்துள்ளார்.    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாளவன் நேற்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை அமுல்படுத்த வேண்டும் என்ற ஐகோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறேன். இலங்கை அதிபர் ராஜபக்சே போர்க்குற்றவாளி என்றும், இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய அதிமுக அரசை பாராட்டுகிறேன். அதே போல் கச்சத்தீவை திரும்ப பெறும் தீர்மானத்தையும் வரவேற்கிறேன். ஏழை பெண்களுக்கு 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டம் நல்ல திட்டம். ஆனால் அதற்கான வருட வருமானத்தை ரூ. 24 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்த வேண்டும். காங்கிரசுடன்- திமுக கூட்டணி வைத்திருப்பது நல்லதல்ல என்பது எங்களின் கருத்து. இந்த கருத்தை திமுகவிடம் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறோம்.
    இலங்கை பிரச்சினை மட்டுமல்லாது சட்டசபை தேர்தலிலும் திமுக- காங்கிரஸ் இடையே ஒரு கசப்பான நிலை ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் பிளாக்மெயில் செய்து 63 சீட்களை பெற்றது. இதனால் தேர்தலில் இரண்டு கட்சிகளும் இணைந்து செயல்படாத நிலை இருந்தது. இதனால் தோல்வியை தழுவும் நிலை ஏற்பட்டது. எனவே காங்கிரஸ் - திமுக கூட்டணி நல்லதல்ல என்று மீண்டும் வற்புறுத்துவோம். வருகிற 14 ம் தேதி சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலை கூட்டம் நடக்கிறது. இதில் உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு, பலம், கூட்டணி ஆகியவை பற்றி விவாதிப்போம் என்றார். பேட்டியின் போது, மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் பாண்டியம்மாள், புறநகர் மாவட்ட செயலாளர் எல்லாளன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்