முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏ.டி.பி. டென்னிஸ் போட்டி லியாண்டர், மகேஷ் ஜோடி அரை இறுதிக்கு முன்னேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2011      விளையாட்டு

லண்டன், ஜூன். - 12  - இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் மற்று ம் மகேஷ் பூபதி ஜோடி காலிறுதியில் வெற்றி பெற்று அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
ஆடவருக்கான ஏ.டி.பி. சுற்றுப் பயணப் போட்டிகளில் ஒன்றான ஏகான் டென்னிஸ் போட்டி இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் அருகே கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.
இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீர ர்கள் மற்றும் வீராங்கனைகள் களத்தில் குதித்துள்ளனர். இந்தப் போட்டி தற்போது அரை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.
இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் தரமான ஆட்டத்தை வெ ளிப்படுத்தி வருகின்றனர். அவர்களது ஆட்டத் திறன் கண்டு ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்து வருகின்றனர்.
இந்தப் போட்டியின் மொத்த பரிசுத் தொகை 6,94, 250 ஈரோக்களாகு ம். இந்தப் போட்டி டயர் - 2 வகையிலான போட்டியாகும். இந்தப் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது.
ஆடவருக்கான இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்று நடந்த து. இதில் இந்தியாவின் லியாண்டர் மற்றும் பூபதி ஜோடியும், பிலிப் மற்றும் இகோர் இணையும் பலப்பரிட்சை நடத்தின.
பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் இறுதியில் கடும் போராட்டத்தி ற்குப் பின்பு இந்திய ஜோடி 6 - 4, 6 - 4 என்ற செட் கணக்கில், பிலிப் பொலாசெக் மற்றும் இகோர் ஜெலினே இணையை வீழ்த்தி அடுத்த சுற் றுக்கு தாவியது.
இந்தப் போட்டியின் 2 -வது செட்டில் லியாண்டர் மற்றும் பூபதி ஜோ டி 7 பிரேக் பாயிண்டுகளை பாதுகாத்தது. இதில் ஒன்றை மாற்றி புள் ளிகளாக்கியது. இதனால் அந்த செட்டில் இந்திய ஜோடிக்கு வெற்றி எளிதானது.
இந்த ஆண்டு இரண்டு கிராண்ட் ஸ்லாம்கள் முடிவடைந்த நிலையில், அடுத்ததாக 3 - வது ஸ்லாமான விம்பிள்டன் விரைவில் இங்கிலாந்தி ல் நடக்க இருக்கிறது. ஏகான் போட்டி விம்பிள்டனுக்கு ஒரு பயிற்சி ஆட்டமாக கருதப் படுகிறது.
இரட்டையர் பிரிவின் மற்றொரு காலிறுதியில் ராபர்ட் மற்றும் ஹொ ரியா ஜோடியும், மிர்ன்யி மற்றும் நெஸ்டர் இணையும் மோத இருக்கி ன்றன. இதில் வெற்றி பெறும் ஜோடியுடன் இந்திய ஜோடி அரை இறு தியில் மோதும்.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்