முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னம் நிரந்தரமாக ஒதுக்கப்பட்டது- தேர்தல் கமிஷன் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.- 12 - தே.மு.தி.க. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியானது. அக்கட்சிக்கு முரசு சின்னம் நிரந்தரமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதுத்தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த மாதம் 19-ந்தேதி தே.மு.தி.க. சார்பில் டெல்லியிலுள்ள தேர்தல் ஆணையத்திற்கு அங்கீகாரம் கோரி கடிதம் அனுப்பப்பட்டது. நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றதையும், சுமார் 30 லட்சம் வாக்குகள் பெற்றதையும் மேற்கண்ட கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. 1968 ஆம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு மற்றும் ஒப்படைப்பு ஆணையின்படி ஒரு மாநில கட்சி அங்கீகாரம் பெறுவதற்குரிய தகுதிகளை தே.மு.தி.க.வும் பெற்றுள்ளதால் இந்த அங்கிகாரம் கோரப்ப்டடது.

இந்திய தேர்தல் ஆணையம் மேற்கண்ட கடிதத்தை முறையாக பரிசீலித்து தே.மு.தி.க. அங்கீகாரம் வழங்கி நேற்று முன்தினம் ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி தே.மு.தி.க. தமிழ்நாட்டில் அங்கீகாரம் பெற்ற அரிசயல் கட்சியாகவும், அதற்கு முரசு சின்னம் நிரந்தரமாக ஒதுக்கப்பட்டுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் கட்சி தொண்டர்களுக்கும, பொது மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்