முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணாநகர் பிரபல உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மகன் மாயம் கடத்தி கொலையா? போலீஸ் விசாரணை

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

பெரம்பூர், ஜூன்.- 12 - சென்னை உயர்நீதிமன்ற பிரபல வழக்கறிஞர் ஒருவருரின் மகன் திடீரென மாயமானார்.  வழக்கறிஞரான இவரின் மோட்டார் சைக்கிள், செல்போன் ஐ.சி.எப் குளம் அருகே மீட்கப்பட்டது. மாயமான வழக்கறிஞர் கடத்தி கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 அவருடைய மோட்டார் சைக்கிள் ஐ.சி.எப் குளம் எதிரே அனாதையாக இருந்தது. அவர் கொலை செய்யப்பட்டரா என போலீசார்  விசாரித்து வருகின்றனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- அண்ணாநகர் மேற்கு தங்கம் காலனி சர்ச் தெருவில் வசித்து வருபவர் சங்கரசுப்பு. இவரது மனைவி மயிலம்மாள் (52) கோஸ்டல் அதிகாரியாக உள்ளார். இவர்களுக்கு சதிஷ்குமார் (24), செந்தில்குமார் (26), ஹேமலதா (23) 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். செந்தில்குமார் சாப்வேர் இன்ஜினியராகவும், மகள் ஹேமலதா டாக்டராகவும் உள்ளனர். சதிஷ்குமார் சட்டம் படித்து, தனது தந்தைக்கு உதவியாக உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சதிஷ்குமார் (24), சட்டபடிப்பு முடித்துள்ளார். அண்ணாநகர் வீட்டிலிருந்து கடந்த 7-ம் த ஏதி வெளியில் வந்த அவர் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பததால், மறுநாள் 8-ந்தேதி திருமங்கலம் காவல் நிலையத்தில தன் மகன் காணவில்லை என்று தந்தை  சங்கர சுப்பு புகார் கொடுத்தார்.
இதுபற்றி திருமங்கலம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்கு பதிவு செய்து சதிஷ்குமாரை தேடினார். அப்போது சதிஷ் குமாரின் செல்போன் ஐ.சி.எப் வடக்கு காலனியிலுள்ள கழிவுநீர் குளத்தில் எதிரில் இருப்பது தெரியவந்தது.
உடனே  மத்திய சென்னை இணை கமிஷனர் சங்கர், துணை கமிஷனர்கள் பிரேமானந்த சின்கா, பவானிஸ்வரி உதவி கமிஷனர் கலிதீர்தான் கண்ணன் ஆகியோர் விரைந்து சென்றனர். அப்போது அங்கு காணாமல் போன சதிஷ்குமாரின் மோட்டார் சைக்கிள் இருந்ததை பார்த்தனர்.
உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம், வேப்பேரி போன்ற பல பகுதியிலிருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து குளத்தில் காற்றுபை அடைத்த 2 படகில் இரண்டில் தீயணைப்பு வீரர்கள் குளத்தில் சதிஷ்குமார் உடல் ஏதாவது தென்படுகிறது என குளத்தில் தேடினார்கள். ஆனாலும் சதிஷ்குமார் உடல் கிடைக்கவில்லை. அங்கு மோப்பநாய் ஸ்டெபி வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் எதையும் கவ்வி பிடிக்கவில்லை. அந்த குளத்தில் அருகே 1 புடவை, நைட்டி, பிளவுஸ் ஆகிய துணிகள் போலீசுக்கு கிடைத்துள்ளது. உண்மையில் சதிஷ்குமாருக்கு என்ன நடந்தது என இதுவரையில் மர்மமாக உள்ளது.  சதிஷ்குமாருக்கு நெருங்கிய நண்பர்களை அழைத்து வந்து போலீஸ் விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்