முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயாநிதியை பதவி நீக்க சரத்யாதவ் வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2011      இந்தியா

புது டெல்லி,ஜூன்.- 13 - மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அவர்,
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விசாரணை வளையத்துக்குள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளார். இந்த விவகாரத்தில் அவரது பங்கும் இருப்பது தெளிவாக தெரிகிறது. இருந்த போதும் அவர் மத்திய அமைச்சராக தொடர்ந்து வருகிறார். எனவே இனியும் காலம் கடத்தாமல் அமைச்சரவையில் இருந்து பிரதமர் மன்மோகன்சிங் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
மலேசியாவில் உள்ள தனியார் நிறுவனம் மாறன் குடும்பத்தாருக்கு சொந்தமான சன் குழும நிறுவனத்தில் முதலீடு செய்ததன் மூலம் சுமார் ரூ. 600 கோடி வரை அவர்கள் பயனடைந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்றார். ராம்தேவ் உண்ணாவிரதத்தின் போது நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து கருத்து கூறிய சரத் யாதவ்,
போலீசாரின் நடவடிக்கை அதிருப்தியளிக்கிறது. ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற ஜனநாயக விரோத செயல் சம்பவத்தை தொடர்ந்து டெல்லியில் அமுல்படுத்தப்பட்ட தடை உத்தரவு உடனடியாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். ஊழல், கறுப்பு பணத்தை முற்றிலுமாக களைய தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்வது நல்லது.. மாறாக, அதற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை முடக்க நினைக்க கூடாது என்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்