முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு இந்திய தீவுகளில் ஒருநாள் தொடரை இந்தியா வென்றது

திங்கட்கிழமை, 13 ஜூன் 2011      விளையாட்டு

ஆன்டிகுவா, ஜூன் - 13 - மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது. இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஒரு டுவெண்டி - 20, 5 ஒரு நாள் போட்டிகள், 3 டெஸ்ட் போட்டிகள் இந்த தொடரில் உள்ளன. இதில் முதலில் நடைபெற்ற டுவெண்டி - 20 போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி, தொடர்ந்து ஒரு நாள் போட்டிகள் இரண்டில் வெற்றிபெற்று 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரிலும் முன்னிலை பெற்றிருந்தது.
இந்நிலையில் இவ்விரண்டு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றிபெற்றால் தொடரை வென்றுவிடும் உத்வேகத்துடன் இந்திய அணியும், தொடரை இழக்காமல் இருக்க இந்த போட்டியில் வென்றே தீரவேண்டிய கட்டாயத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணியும் களமிறங்கின. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா, வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட் செய்ய கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து துவக்க ஆட்டக்காரர்களாக சிம்மன்சும், எட்வர்ட்சும் களமிறங்கினர். துவக்கமே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சரிவாக அமைந்தது. இரண்டாவது ஓவரை வீசிய முனாப் பட்டேல் அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் ரன் எதுவும் எடுக்காத நிலையில் எட்வர்ட்சை அவுட்டாக்கினார். விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேல், எட்வர்ட்ஸ் கொடுத்த கேட்சை அழகாக பிடித்து அவரை வெளியேற்றினார். தொடர்ந்து ராம்நரேஷ் சர்வான் களமிறங்கினார். இவரும் சிம்மன்சும் நிதானமாக ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். இந்நிலையில் அணியின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்தபோது 28 ரன்களை எடுத்திருந்த சர்வான் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் சரிவு துவங்கியது. இந்த சரிவை துவக்கிவைத்தவர் இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா. அப்போது களமிறங்கிய சாமுவேல்ஸ் 1 ரன்னை மட்டுமே எடுத்து மிஸ்ராவின் பந்தில் பார்த்தீவ் பட்டேலால் ஸ்டம்ப்பிங் முறையில் அவுட்டானார். இவரைத் தொடர்ந்து வந்தார் அறிமுக வீரர் ஹயாத். இவரும் மிஸ்ராவின் சுழலில் ஏமாந்து 1 ரன்னை மட்டும் எடுத்து கிளீன் போல்டானார். அடுத்ததாக அதிரடி வீரர் பொலார்டு களமிறங்கினார். இந்நிலையில் நன்கு விளையாடிக்கொண்டிருந்த சிம்மன்சும் 45 ரன்கள் எடுத்த நிலையில் மிஸ்ராவின் பந்தில் விராட் கோஹ்லியால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து விக்கெட் கீப்பர் பாவ் களமிறங்கினார். அணியின் எண்ணிக்கை 85 ஐ எட்டியபோது ஹர்பஜன் சுழலில் பொலார்டு 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அவுட்டானார். இந்நிலையில் கேப்டன் டேரன் சம்மி களமிறங்கினார். இவராலும் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சம்மி 3 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் முனாப் பட்டேலின் பந்தில் பார்த்தீவ் பட்டேலால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். வெஸ்ட் இண்டீஸ் அணி 29.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களை மட்டுமே எடுத்து தத்தளித்தது. இந்நிலையில் ரஸ்ஸல் களமிறங்கினார். இவரும் பாவ்வும் வெஸ்ட் இண்டீஸ் அணியை தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த ஜோடி கிட்டத்தட்ட 15 ஓவர்கள் தாக்குப்பிடித்து விளையாடியது. குறிப்பாக ரஸ்ஸல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  அணியின் எண்ணிக்கை 174 க்கு உயர்ந்தபோது 36 ரன்களை எடுத்திருந்த பாவ், முனாப் பட்டேலின் பந்தில் தவானால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்ததாக கீமா ரோச் களமிறங்கினார். இந்நிலையில் ரஸ்ஸலின் அதிரடி தொடர்ந்தது. ரஸ்ஸல் தான் சந்தித்த கடைசி 14 பந்துகளில் 42 ரன்களை குவித்தார். இவரது அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 225 ரன்கள் என்ற கெளரவமான ஸ்கோரை எட்டியது. ரஸ்ஸல் ஆட்டமிழக்காமல் 64 பந்துகளில் 92 ரன்களையும், ரோச் ஆட்டமிழக்காமல் 7 ரன்களையும் எடுத்திருந்தனர். இந்திய தரப்பில் முனாப் பட்டேல், அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை விரட்டிய இந்திய அணியில் துவக்க வீரர் பார்த்தீவ் பட்டேல் அதிரடியாக துவக்கினார். ஆனால் தவான் துவக்கம் சரியாக இல்லை. அணியின் எண்ணிக்கை 26 ஐ எட்டியபோது தவான் கேப்டன் டேரன் சம்மியின் பந்தில் 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் சாமுவேல்சால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இவரைத் தொடர்ந்து கடந்த போட்டியின் ஆட்டநாயகன் விராட் கோஹ்லி தான் சந்தித்த முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யூ. முறையில் அம்பயரின் தவறான தீர்ப்பினால் அவுட்டானார். இதனால் 26 ரன்களிலேயே இந்திய அணி 2 வது விக்கெட்டையும் இழந்தது. தொடர்ந்து தமிழக வீரர் பத்ரிநாத் களமிறங்கினார். இவர் மிக நிதானமாகவே ஆடினார். அணியின் எண்ணிக்கை 60 ஆக இருந்தபோது 11 ரன்களை எடுத்திருந்த பத்ரிநாத் ரன் அவுட்டானார். இவரைத் தொடர்ந்து ரோஹித் சர்மா களமிறங்கினார். அணியின் எண்ணிக்கை 79 ஐ எட்டியபோது நன்கு விளையாடிக்கொண்டிருந்த பார்த்தீவ் பட்டேல் 46 ரன்களில் பிஷுவின் சுழல் பந்தில் வீழ்ந்தார். ரஸ்ஸல் கேட்ச் பிடித்து பட்டேலை வெளியேற்றினார். தொடர்ந்து கேப்டன் ரெய்னா வந்தார். இவரும் அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அணியின் எண்ணிக்கை 88 ஆக இருந்தபோது 3 ரன்களை எடுத்திருந்த ரெய்னா, பொலார்டின் பந்தில் சிம்மன்சால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது இந்திய அணி 21.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அடுத்து வந்த யூசுப்பதான் ஒரு ரன் எடுத்த நிலையில் , பிஷுவின் சுழற்பந்தை சரியாக கணிக்காமல் தூக்கி அடித்தார். அந்த கஷ்டமான கேட்சை அற்புதமாக பிடித்தார் சிம்மன்ஸ். ஒரு முனையில் விக்கெட்டுகள் தொடர்ச்சியாக விழுந்தாலும் ரோஹித் சர்மா நிதானமாக நின்று ரன்களை சேர்த்துகொண்டிருந்தார். கிட்டத்தட்ட இந்திய அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணியைப் போலவே தடுமாறியது.  இந்நிலையில் ஹர்பஜன்சிங், ரோஹித் உடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் பொறுப்பை உணர்ந்து அடிக்க வேண்டிய பந்துகளை அடித்து ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். இந்த ஜோடியை பிரிக்க வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அணியின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்தபோது அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த ஹர்பஜன் சிங் 41 ரன்கள் எடுத்த நிலையில் ரஸ்ஸல் பந்தில் விக்கெட் கீப்பரால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய பிரவீன் குமார் பேட்டிங் பவர் பிளேயை பயன்படுத்தி அதிரடியாக ரன்களை குவித்தார். எதிர் முனையில் ரோஹித்தும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி 46.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களை எடுத்தது. இதனால் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. ரோஹித் சர்மாக ஆட்டமிழக்காமல் 86 ரன்களையும், குமார் ஆட்டமிழக்காமல் 25 ரன்களையும் எடுத்திருந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் டேரன் சம்மி, பிஷு ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ரஸ்ஸல், பொல்லார்டு ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 64 பந்துகளில் 92 ரன்களைக் குவித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரஸ்ஸல் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் 3 - 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. மேற்கு இந்திய தீவுகள் அணி  ஏப்ரல் 2008 க்கு பிறகு எந்த ஒரு டெஸ்ட் விளையாடும் நாட்டுக்கு எதிராகவும் தொடரை வெல்லவில்லை என்ற பரிதாப நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago