முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முஷாரப்புக்கு நிரந்தர கைது வாரண்ட் பாகிஸ்தான் நீதிமன்றம் பிறப்பித்தது

திங்கட்கிழமை, 13 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்,ஜூன்.- 13 - பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவரமுடியாத நிரந்தர கைது வாரண்டை பிறப்பித்துள்ளது.
முன்னாள் பிரதமர் பெனாசிர் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு முஷாரப் ஒத்துழைப்பு அளிக்காததை கண்டித்து அவருக்கு நிரந்தர கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராவல்பிண்டி பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணைக்கு பல முறை சம்மன் அனுப்பியும் முஷாரம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து நீதிபதி முஷாரப்புக்கு கைது வாரண்டை பிறப்பித்தார்.
பெனாசிர் கொல்லப்பட்ட வழக்கில் தற்கொலைப் படை பயங்கரவாதி உட்பட 5 பேர் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுகின்றனர். இந்த வழக்கு விசாரணைக்கு பல மாதங்களாக முஷாரப் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் முஷாரப் தலைமறைவு குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. முஷாரப் ஆட்சியின் போது பெனாசிருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க தவறி விட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.
கடந்த 2007 ம் ஆண்டு நாடு திரும்பிய பெனாசிர் அதே ஆண்டு டிசம்பரில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசுகையில் தற்கொலைப் படை தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்