Idhayam Matrimony

அவசரநிலை பிரகடனம் செய்யும் சூழ்நிலை: பா.ஜ.க.

செவ்வாய்க்கிழமை, 14 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

 

ஸ்ரீநகர்,ஜூன்.14 - நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யும் மாதிரியான ஒரு சூழ்நிலையை காங்கிரஸ் உருவாக்குகிறது என்று பாரதிய ஜனதா கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளது. 

நாட்டில் ஊழலுக்கு எதிராக பாபா ராம்தேவ், அண்ணா ஹசரே ஆகியோர் போராட்டம் நடத்தினர். இதனால் ஆட்சியில் இருப்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மக்களிடமும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக போராட்டத்தை நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யும் அளவுக்கு ஒரு சூழ்நிலையை காங்கிரஸ் கட்சியினர் உருவாக்கி வருகிறார்கள் என்று பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவ்தேகர் நேற்று ஸ்ரீநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பாபா ராம்தேவுக்கு எதிராக காங்கிரசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது ஜனநாயக விரோத செயலாகும் என்று ஜவ்தேகர் கூறினார். ஊழலுக்கும் கறுப்புபணத்திற்கு எதிராகவும் பாபா ராம்தேவும் அண்ணா ஹசரேவும் போராட்டம் நடத்தி வருவதை ஊக்குவித்து அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜ.பயன்படுத்தி வருகிறது என்று காங்கிரஸ் குற்றச்சாட்டு குறித்து கேட்டதற்கு பதில் அளித்த ஜவ்தேகர், ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக யார் போராட்டம் நடத்தினாலும் அதை பாரதிய ஜனதா ஆதரிக்கும் என்றார். எங்களுடை கட்சி ஒரு கள்ளத்தனமானது அல்ல. ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக முதன் முதலில் கடந்த 2009-ம் ஆண்டு லோக்சபை தேர்தலின்போது எங்கள் கட்சி தலைவர் எல்.கே. அத்வானிதான் எழுப்பினார். ஆனால் அத்வானியின் குற்றச்சாட்டை ஒரு நகைச்சுவை போன்று காங்கிரஸ் எடுத்துக்கொண்டு அவரது குற்றச்சாட்டை காங்கிரஸ் புறக்கணித்துவிட்டது என்று ஜவ்தேகர் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்