முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் தொடரிலும் முனாப் சாதிப்பார்: எரிக் சிம்மன்ஸ்

செவ்வாய்க்கிழமை, 14 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன். 14 - மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் முனாப் படேல் சாதிப்பார் என்று இந்திய பந்து வீச்சு பயிற்சியாளரான எரிக் சிம்மன்ஸ் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இது பற்றிய விபரம் வரு மாறு - இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா தலைமையில் மே ற்கு இந்தியத் தீவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் டேரன் சம்மி தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

மே.இ.தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிந்த நிலையில் இந்தியா 3 - 0 என்ற கணக்கில் தொட ரைக் கைப்பற்றி விட்டது. 

ஒரு நாள் போட்டித் தொடரில் சிறப்பாக பந்து வீசி மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியவர் முனாப் படேல். இவர் குறித்து இந்திய கிரிக்கெட்டின் பந்து வீச்சு பயிற்சியாள  ர் எரிக் சிம்மன்ஸ் கூறியதாவது - 

தற்போது நடைபெற்று வரும் ஒரு நாள் தொடரில் கடந்த 3 போட்டி களில் முனாப் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தொடர்ந் து கடினமான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் முனாப் படேல். 

இவர் சாதிக்கக் கூடிய இளம் வீரர் என்பதைக் காண முடிகிறது. மே.இ.தீவுக்கு எதிரான அடுத்த 2 ஒரு நாள் போட்டிகளிலும் அவரது பந்து வீச்சு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். 

தனது திறனை நன்கு உணர்ந்துள்ள முனாப் எவ்வித பதட்ட சூழலிலும் நிலைமையை சமாளித்து அபாரமாக பந்து வீசக் கூடியவர். இந்த திற மை அவரிடம் உள்ளது. கடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி யில் ஜாஹிர்கானுடன் இணைந்து அசத்தியவர் முனாப் படேல். ஆனால் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. வெகுவாக பாராட்டப்படவும் இல்லை. இவரது பந்து வீச்சு இந்திய அணியின் வெற்றிக்கு பலமுறை கை கொடுத்துள்ளது. 

எதிர்வரும் டெஸ்ட் தொடரில் பிரவீன் குமார், இஷாந்த் சர்மா ஆகி யோருடன் இணைந்து முனாப் அபாரமாக பந்து வீசுவார். இந்தியா டெஸ்ட் தொடரையும் கைப்பற்ற உதவுவார் என்று நம்புகிறேன். இவ் வாறு அவர் கூறினார். 

இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையே அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது. இதில் மூத் த வீரர்கள் டெண்டுல்கர், தோனி, லக்ஷ்மண், ஹர்பஜன் சிங் ஆகி யோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்