முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்; குற்றச்சாட்டு: சோனியாக்கு அண்ணா ஹசரே கடிதம்

செவ்வாய்க்கிழமை, 14 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன்.14  -  காங்கிரஸ் தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளதற்கு வருத்தம் அடைந்துள்ள அண்ணா ஹசரே, சோனியா காந்திக்கு 3 பக்கம் கொண்ட ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். நாட்டில் மலிந்துவிட்ட ஊழலை எதிர்த்தும் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர வலியுறுத்தியும் அண்ணா ஹசரேவும் பாபா ராம்தேவும் போராட்டம் நடத்தினர். இவர்கள் இருவரும் பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முகம் என்று காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக குற்றஞ்சாட்டியிருந்தனர். இதற்கு வருத்தம் அடைந்துள்ள அண்ணை ஹசரே, சோனியாவுக்கு 3 பக்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில் அண்ணை ஹசரே கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் தலைவர்கள் என் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளனர். இதனால் நான் மிகவும் நிலைகுலைந்துள்ளேன். இந்த குற்றச்சாட்டு விவகாரம் எனக்கு மன வருத்தத்தை அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் உள்ள சில தலைவர்கள் என் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். இந்த மாதிரி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிரசாரம் செய்வது லோக்பால் மசோதா தயாரிப்பதை கடுமையாக பாதிக்கும். நான் கடந்த ஏப்ரல் மாதம் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தபோது எனக்கு கிடைத்த ஆதரவை காங்கிரஸ் தலைவர்களில் சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.                                                                                                                                                                                                                நான் உண்ணாவிரதம் இருந்ததால்தான் லோக்பால் வரைவு மசோதா தயார் செய்ய மத்திய அரசு உட்படுத்தப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊழலுக்கு எதிராக நான் போராட்டம் நடத்தியதால்தான் பாரதிய ஜனதா , காங்கிரஸ், சிவசேனா கட்சிகளை சேர்ந்த சில தலைவர்கள் விலை கொடுக்க நேரிட்டது என்பதை நினைவு கூற விரும்புகிறேன். ஜந்தர் மந்தர் உண்ணாவிரதத்தை கைவிட்ட பிறகு குஜராத் மாநிலத்தில் ஊழலுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டேன். அப்போது ஊழலால் குஜராத் மாநிலம் தவித்துக்கொண்டியிருக்கிறது எனறு கூறினேன். அந்த மாநிலத்தில் பாரதிய ஜனதா அரசு இருந்தபோதிலும் கூட நான் இதை கூறினேன். லோக்பால் மசோதா தயார் செய்வதில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை. அதற்கு பதிலாக லோக்பால் மசோதா வரைவு கமிட்டியில் இருக்கும சிவில் உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டை சுமத்தி வருகிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் அண்ணா ஹசரே கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்