முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

73 நாள் உண்ணாவிரதம் இருந்த சாமியார் மரணம்

புதன்கிழமை, 15 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

ஹரித்துவார்,ஜூன்.15 - கங்கையை காப்பாற்ற வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த சாமியார் ஒருவர் ஹரித்துவாரில் மரணமடைந்தார்.  ஹரித்துவாரில் சாமி நிகாமானந்த் என்ற சாமியார் மந்திரசதான் என்ற ஆசிரமத்தில் இருந்து வந்தார். இவர் கங்கை ஆறு மாசுபடுத்தப்படுவதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தார். கங்கை கரை பகுதியில் கல் குவாரிகள் செயல்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். கல் குவாரிகளை எதிர்த்து வழக்கும் தொடுத்திருந்தார். 

ஆனால் குவாரி அதிபர்கள் ஐகோர்ட்டில் தடை வாங்கி குவாரியை தொடர்ந்து நடத்தி வந்தனர். இதனால் கங்கை ஆறு பெரிதும் மாசுபட்டது. எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவாமி நிகாமானந்த் 73 நாட்களுக்கு முன்னால் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். ஆனால் இவருக்கு அரசியல்வாதிகளோ, மற்றவர்களோ ஆதரவு தெரிவிக்கவில்லை. தன்னந்தனி ஆளாக சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்ததால் ஒரு மாதத்திற்கு முன்பு மயங்கி விழுந்தார். அவருக்கு கோமா நிலை ஏற்பட்டது. 

இந்த நிலையில் அவர் ஹரித்துவாரில் உள்ள இமாலயன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் காலை சிகிச்சை பலனளிக்காமல் அவரது உயிர் பிரிந்தது. இந்த இமாலயன் மருத்துவமனையில்தான் உண்ணாவிரதம் இருந்து சுவாமி ராம்தேவும் சேர்க்கப்பட்டிருந்தார். அவரை தினமும் பார்க்க வந்த அரசியல்வாதிகளும், சாமியார்களும் 73 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த நிகாமானந்தை யாரும் கண்டு கொள்ளவே இல்லை. கடைசியில் அவரை மரணம்தான் கண்டுகொண்டது. பாவம் நிகாமானந்த்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்