முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னா ஹசாரேவுக்கு இன்று 74-வது பிறந்தநாள்

புதன்கிழமை, 15 ஜூன் 2011      ஊழல்
Image Unavailable

 

மும்பை, ஜூன் 15 - ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நடத்திவரும் அன்னா ஹசாரேவுக்கு இன்று 74-வது பிறந்தநாள். ஊழலுக்கு எதிராக சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி புகழ்பெற்றவர் அன்னா ஹசாரே. இவரது உண்ணாவிரதத்திற்கு பிறகுதான் ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் 10 பேர் கொண்ட கூட்டுக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவில் அன்னா ஹசாரே போன்ற சமூக ஆர்வலர்களும் பங்கற்றுள்ளனர். இந்த கூட்டுக் குழுவின் அடுத்த கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டுக்குழுவில் 

அன்னா ஹசாரே பங்கேற்க இருக்கிறார். 

இந்த நிலையில் அன்னாஹசாரேவுக்கு இன்று 74 -வது பிறந்தநாள் வருகிறது. பொதுவாக அன்னா ஹசாரே தனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில்தான் பிறந்தநாளை கொண்டாடுவார். அதுவும் தனது பிறந்த நாளை மிகவும் எளிமையாகத்தான் கொண்டாட வேண்டும் என்று அவர்  வலியுறுத்துவார். எனவே பல ஆண்டுகளாக அவரது பிறந்தநாளை கடந்த பல ஆண்டுகளாக எளிமையான முறையில்தான் கொண்டாடி வருகிறோம் என்று அவரது உதவியாளர்  தத்தா அவாரி செய்தியாளர்களிடம் கூறினார். அன்னா ஹசாரே தனது பிறந்தநாளை பெரிய அளவில் கொண்டாட விரும்பமாட்டார். அதற்கு பதிலாக ஒவ்வொரு ஆண்டும்  அவர் மரக் கன்று நடுதல், அனாதை குழந்தைகளுக்கு அன்னதானம், ரத்த தானம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை அவரது பிறந்த நாளின்போது நாங்கள் நடத்துவோம் என்றும் அவர் கூறினார். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு பழங்களையும் விநியோகம் செய்வோம். இந்த ஆண்டு எளிமையாக கொண்டாடினாலும் கூட  அடுத்த  75 வது  அன்னா ஹசாரேவின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாட  தாங்கள் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்