முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏ.டி.பி. டென்னிஸ்: பயஸ்-மகேஷுக்கு ரன்னர்ஸ் அப் பட்டம்

புதன்கிழமை, 15 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூன். 15 - இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் நடைபெற்ற சர்வதேச டென் னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவைச் சேர்ந்த பாப் பிரையான் மற்றும் மைக் பிரையான் ஜோடி இறுதிச் சுற்றில் வெ ற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. 

இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் ஆடிய இந்தியாவைச் சேர்ந்த லியாண்டர் பயஸ் மற்றும் மகேஷ் பூபதி இணைக்கு ரன்னர்ஸ் அப் பட்டம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

ஆடவருக்கான ஏ.டி.பி. சுற்றுப் பயணப் போட்டிகளில் ஒன்று இங்கி லாந்தின் தலைநகரான லண்டனில் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்தது. அந்தப் போட்டி தற்போது நிறைவு அடைந்துள்ளது. 

ஏ.டி.பி. போட்டியான இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன் னணி வீரர்கள் களத்தில் குதித்தனர். அவர்களது ஆட்டத் திறன் கண்டு இங்கிலாந்து ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். 

இந்தப் போட்டியின் மொத்த பரிசுத் தொகை 5.4 மில்லியன் டாலர்களாகும். இந்தப் போட்டி டயர் - 2 வகையிலான போட்டியாகும். இதி ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் லியாண்டர் மற்றும் மகேஷ் ஜோடி இரட்டையர் பிரிவில் பங்கேற்றது. 

இதன் இறுதிச் சுற்றில் பட்டத்தைக் கைப்பற்ற லியாண்டர் பயஸ் மற்று ம் மகேஷ் பூபதி ஜோடியும், அமெரிக்காவைச் சேர்ந்த பிரையான் சகோதரர்களும் பலப்பரிட்சை நடத்தினர். 

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதியில் அமெரிக்கா வைச் சேர்ந்த பாப் பிரையான் மற்றும் மைக் பிரையான் இணை அபாரமாக ஆடி, 6 - 7, 7 -6, 10 - 6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. 

இந்தப் போட்டியில் இந்திய ஜோடி கடுமையாக போராடி அமெரிக்க இணையிடம் தோல்வி அடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை கோ  ட்டை விட்டது . இந்த ஆட்டம் சுமார் 1 மணி நேரம் 43 நிமிடத்தில் முடிவு அடைந்தது. 

இந்த இறுதிச் சுற்றில் முதல் இரண்டு செட்டிலும் இரு ஜோடிகளும் வெ ற்றிக்காக கடுமையாக போராடின. முன்னதாக நடந்த முதல் செட்டில் இந்திய ஜோடி கடும் இழுபறிக்குப் பின்பு 7 - 6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. 

இதே போல இரண்டாவது செட்டிலும் ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு ஜோடிகளும் மாறி மாறி புள்ளிகளை பெற்றன. இறுதியில் அமெ ரிக்க இணை 7 - 6 என்ற கணக்கில் வென்றது. தொடர்ந்து 3 -வது செட்டையும் வென்று பட்டத்தை தனது வசமாக்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்