முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு நாள் தொடரை வெல்ல பயிற்சியாளரே காரணம்: ரெய்னா

புதன்கிழமை, 15 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன். 15 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை வெ ல்ல பயிற்சியாளரே காரணம் என்று இந்திய அணியின் தற்காலிக கே ப்டனாக பொறுப்பேற்றுள்ள சுரேஷ் ரெய்னா பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.  இது பற்றிய விபரம் வருமாறு - 

இளம் இந்திய அணி குறுகிய காலத்தில் நிறைவாக ஆடி, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது மனநிறைவு அளிக் கிறது. இதற்கு இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் டன்கன் பிளட்சர் தந்த ஒத்துழைப்பே காரணம் என்று மனந்திறந்து ஒப்புக் கொண்டுள்ளார் இந்திய கேப்டன் ரெய்னா. 

இந்த வெற்றி குறித்து அவர் மேலும் கூறியதாவது - ஆண்டவனின் அன்பு எங்கள் அணி மீது  அதிகமுள்ளது. பயிற்சியாளர் பிளட்சர், பந் து வீச்சு பயிற்சியாளர் சிம்மன்ஸ் ஆகியோரின் முழு ஒத்துழைப்பு தா ன் வெற்றிக்கு முழு காரணம். 

ஐ.பி.எல். போட்டிக்குப் பிறகு, நேரடியாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு பயணமானதால் போதிய பயிற்சி பெறும் வாய்ப்பு எங்கள் வீரர்களு க்கு இல்லாமல் போனது. இங்கு வந்து சில உள்ளூர் அணிகளுடன் ஆடி பயிற்சி மேற்கொண்டது எங்களுக்கு உதவியது. 

மேற்கிந்திய தீவுகள் பேட்ஸ்மேன் ரஸ்சலின் ஆட்டம் அபாரமாக இருந்தது. வியக்கும் வகையில் அற்புதமான ஷாட்டுகளை அவர் ஆடினா ர். எங்கள் அணியில் அமித் மிஸ்ராவின் பந்து வீச்சு தொடர்ந்து சிறப் பாக அமைந்துள்ளது. அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன். 

என்னோடு இணைந்து ரோகித் சர்மா, ஹர்பஜன் சிங் ஆகியோர் சிறப் பாக ஆடி வருகின்றனர். ரோகித்தின் ஆட்டம் இத்தொடரில் குறிப்பிட த்தக்கதாக அமைந்துள்ளது. 

எஞ்சியுள்ள போட்டிகளில் இதுவரை ஆடாமல் அணியில் உள்ள வீரர் களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். வினய் குமார், மனோஜ் திவாரி மற் றும் அஸ்வின் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு ரெய் னா கூறினார். 

கேப்டன் சுரேஷ் ரெய்னா தலைமையிலான இந்திய அணி மேற்கு இந் தியத் தீவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் டேரன் சம்மி தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. இதில் முத ல் 3 ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 3 - 0 என்ற கணக் கில் கைப்பற்றியது. 4 -வது ஆட்டத்தில் மே.இ.தீவு ஆறுதல் வெற்றி பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்