முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனி தெலுங்கானா தாமதம் ஏன்? சந்திரபாபு கேள்வி

புதன்கிழமை, 15 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

 

ஐதராபாத், ஜூன் 15 - தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பான முடிவை இன்னும் காலதாமதப்படுத்தி வருவது ஏன்? என்று வினா எழுப்பியுள்ள தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, இந்த காலதாமதத்திற்கு மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ் ஏற்கனவே பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார். இவரது போராட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உச்சகட்டத்தை அடைந்தபோது தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும் என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதி அளித்தது. ஆனால் அந்த உறுதிமொழிப்படி தனி தெலுங்கானா இன்னும் அமைக்கப்படவில்லை. தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கலாமா என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக மக்களின் கருத்துக்களை கேட்டறிவதற்காக நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி ஆந்திராவில் தனி தெலுங்கானா மாநிலத்தில் தீர்வு காண 6 அம்ச திட்டத்தை வரையறுத்துக் கொடுத்தது. ஆனால் இந்த ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கைக்கை பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டினர். இதையடுத்து தனி தெலுங்கானா அமைக்கப்படுமா என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. தனி தெலுங்கானா விஷயத்தில் மத்திய அரசு முடிவெடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. 

இந்த காலதாமதம் ஏன் என்று தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார். தனி தெலுங்கானா மாநில அறிவிப்பை வெளியிடுவதில் காலதாமதம் ஏன் என்பது குறித்து மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தெலுங்கானா விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியது மத்திய அரசுதான். இந்த விஷயத்தில் கால தாமதத்திற்கான காரணம் என்ன என்பதை மக்களுக்கு மத்திய அரசு விளக்க வேண்டும் அவர் கேட்டுக்கொண்டார். தெலுங்கானா விஷயத்தில் ஆந்திர மாநிலத்தில் நீண்ட காலமாக குழப்பமான சுழ்நிலை காணப்படுவதால் மத்திய அரசின் இந்த விளக்கம் மிகவும் தேவைப்படுகிறது. 

ஐதராபாத்தில் உள்ள என்.டி.ஆர். பவனில் கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் ஆகியோர் பங்கேற்ற இரண்டு நாள் பணிமனையை துவக்கிவைத்து பேசுகையில் சந்திரபாபு நாயுடு மேற்கண்டவாறு கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்