முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாசனத்திற்காக வைகை அணையை அமைச்சர் திறந்து வைத்தார்

புதன்கிழமை, 15 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

ஆண்டிபட்டி,ஜீன்.15 - திண்டுக்கல்-மதுரை மாவட்ட பாசனத்திற்காக அமைச்சர் செல்லுர் ராஜீ வைகை அணையிலிருந்து விநாடிக்கு 900 கன அடிவீதம் தண்ணீரை திறந்து வைத்தார்.தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணையிலிருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் இருபோக சாகுபடி நிலங்களின் முதல்போக பாசனத்திற்கு நேற்று பகல் 11 மணியளவில் விநாடிக்கு 900 கன அடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.இதனை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜீ திறந்து வைத்தார்.இதன் மூலம் மதுரை மாவட்டம் வடக்கு வட்டத்தை சேர்ந்த 29501 ஏக்கர் நிலங்களும்,வாடிப்பட்டி வட்டத்தை சேர்ந்த 1374.7 ஏக்கர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தை சேர்ந்த 1793 ஏக்கர் உள்பட மொத்தமாக 45041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்,இது குறித்து மாவட்ட கலெக்டர் சகாயம் கூறியதாவது:இன்று முதல் 120 நாட்களுக்கு மதுரை ,திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 45041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அணையிலிருந்து வினாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீரை முதல்வரின் ஆணையின்படி கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லுர் ராஜீ திறந்து வைத்துள்ளார்.விவசாயிகள் குறுகிய கால பயிர்களை நடவு செய்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, அதிக மகசூல் பெற்றும் மகிழ்ச்சியுடன் இருக்க கேட்டுக்கொள்கிறேன். இந்த தண்ணீர் 45 நாட்களுக்கு தொடர்ந்தும் பின்னர் அணையின் நீர்வரத்து இருப்பை கணக்கில் கொண்டு சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்படும் என்றார்.இந்நிகழ்ச்சியின் போது எம்.எல்.ஏக்கள் திருமங்கலம் முத்துராமலிங்கம் ,சோழவந்தான்  கருப்பையா,பொதுப்பணித்துறை வைகை பெரியாறு நீர்கோட்ட கண்காணிப்பு பொறியாளர் ஆதம் மொகைதீன்,மேலூர் கோட்ட நிர்வாக பொறியாளர் விஜயகுமார் ,வைகை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன்,தேனி மாவட்ட வருவாய் அலுவலர் பிருந்தாதேவி,ஆகியோர் கலந்து கொண்டனர்.முன்னதாக ஆண்டிபட்டிக்கு வந்த அமைச்சர் செல்லுர் ராஜீக்கு ஒன்றிய செயலாளர் பால்பாண்டியன் தலைமையில் வரவேற்பு  அளித்தனர்.பின்னர் அமைச்சர் வைகை சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தார்.இந்நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி தொகுதி கழக செயலாளர் ஈஸ்வரிமுருகன்,ஒன்றிய துணை செயலாளர் அமரேசன் ,மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் வரதராஜன்,எம்.ஜி.ஆர் மன்ற ஒன்றிய செயலாளர் சீனிவாசன்,இணைச்செயலாளர் செந்தில்பரமசிவம்,இளைஞர்பாசறை நிர்வாகிகள் பாண்டியராஜன்,விஜயகுமார்,பெரியகுளம் ஒன்றிய  முன்னாள் சேர்மன் வைகைபாண்டி,வைகை கிளை செயலாளர் விசுவநாதன்,வைகை ஊராட்சி தலைவர் முத்துபாண்டி,மற்றும் மறவபட்டி முருகன்,மாவட்ட மாணவரணி செயலாளர் முருகேசன்,ராஜ்குமார்,உள்பட ஒன்றிய நகர,கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago