முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வழக்கறிஞர் மகன் கடத்தி கொலை: ஏரியில் பிணம் மீட்பு

புதன்கிழமை, 15 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.15 - கடந்த வாரம் காணாமல் போன வழக்கறிஞரின் உடன் நேற்று ஏரியில் பிணமாக மீட்கப்பட்டது. அவர் கடத்தி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்பதால் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று அவரது தந்தை வழக்கறிஞர் சங்கரசுப்பு கோர்ட்டில் மனு செய்ததை ஏற்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அண்ணாநகர் மேற்கு தங்கம் காலனியைச் சேர்ந்தவர் சங்கரசுப்பு. பிரபல வழக்கறிஞர். இவரது மகன் சதீஷ்குமார். இவரும் சட்டப்படிப்பை முடித்துள்ளார்.   

கடந்த 7​ந்தேதி இரவு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற சதீஷ்குமார் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியாததால் சங்கரசுப்பு, திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். பின்னர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவையும் தாக்கல் செய்தார். அதில் மாயமான எனது மகனை கண்டுபிடிக்க போலீசார் தீவிரம் காட்டவில்லை. தனிப்படை அமைத்து அவரை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது.   ஐ.சி.எப். வடக்கு காலனியில் உள்ள ஏரி அருகே சதீஷ்குமாரின் மோட்டார்சைக்கிளும், செல்போனும் கண்டெடுக்கப்பட்டது. அருகில் இருந்த ஏரியில் மூழ்கி சதீஷ்குமார் இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதினர். 

கடந்த 4 நாட்களாக தீயணைப்பு வீரர்கள் ஏரியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று மாலையில் சதீஷ்குமாரின் உடல் மீட்கப்பட்டது. அதனை பார்த்து அவரது தந்தை சங்கரசுப்பு, தாய் மயிலம்மாள் ஆகியோர் கதறி அழுதனர்.   கடந்த 7 நாட்களாக சதீஷ்குமார் பற்றி எந்தவித தகவலும் இல்லாமல் இருந்ததால், அவர் எங்காவது வெளியில் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் மாலையில் அவர் பிணமாக மீட்கப்பட்டது உறவினர்களை மட்டுமின்றி போலீசாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சதீஷ்குமார் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. ஏரியில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை சதீஷ்குமாரை யாராவது கொன்று ஏரியில் வீசினார்களா? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, சதீஷ்குமாரின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரியவில்லை. 

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர்தான் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என்றார்.   இந்த நிலையில் சதீஷ் குமார் தந்தை வக்கீல் சங்கரசுப்பு சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது மகனின் முகம் முழுவதும் சிதைக்கப்பட்டுள்ளது. வலது கை சுண்டு விரல் சிதைக்கப்பட்டுள்ளது. இடது கையில் ரத்தக்கறை படிந்த காயம் உள்ளது. கழுத்தின் பின்பக்கத்தில் 3 அங்குல ஆழத்துக்கு காயம் உள்ளது. கால் விரல் நகங்கள் அகற்றப்பட்டு உள்ளது. முன் நெற்றியில் ரத்தக் காயங்கள் உள்ளது. இதை வைத்து பார்க்கும் போது மனிதாபிமானமற்ற முறையில் பலர் சேர்ந்து எனது மகனை கொடூரமாக கொலை செய்து இருப்பதாக அஞ்சுகிறேன்  என் மீது கொண்ட பகையின் காரணமாக கூலிப்படை உதவியுடன் எனது மகனை கடத்திச் சென்று சித்ரவதை செய்து கொலை செய்து ஐ.சி.எப். ஏரியில் தூக்கிப் போட்டதாக கருதுகிறேன். 

எனவே எனது மகனின் உடலை நான் கூறும் தடயவியல் டாக்டர் உதவியுடன் கொண்ட மருத்துவ குழு மூலம் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடவேண்டும். இதனை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். மேலும் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனு nullநீதிபதிகள் நாகப்பன், சிவக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. சங்கரசுப்பு சார்பில் தமிழ்நாடு வக்கீல்கள் சங்க தலைவர் பிரபாகரன் ஆஜராகி வாதாடினார்.  

இதையடுத்து nullநீதிபதி சென்னை அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஆவடி மருத்துவமனைகளில் தடயவியல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் மனுதாரர் கூறும் தடயவியல் மருத்துவ குழு துணையுடன் சதீஷ்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று நிதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago