முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கப்பல் போக்குவரத்து துவக்க விழா புறக்கணித்ததற்கு சீமான் பாராட்டு

புதன்கிழமை, 15 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன். 15 -தூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையேயான கப்பல் போக்குவரத்து துவக்க விழாவை தமிழக அரசு புறக்கணித்துள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:​ தமிழ்நாட்டின் தூத்துக்குடிக்கும், இலங்கையின் கொழும்புவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்க விழாவை தமிழக அரசு புறக்கணித்துள்ளதை நாம் தமிழர் கட்சி பாராட்டி வரவேற்கிறது. 

இலங்கை தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்து விட்டு, இன்றைக்கும் அவர்களின் வாழ்வை சின்னபின்னமாக்கி சிதறடித்து விட்டு, அரசியல் தீர்வு எதையும் வெளியில் இருந்து யாரும் வற்புறுத்த முடியாது என்று திமிராக பேசி வருகிறது சிங்கள இனவாத ராஜபக்சே அரசு. சமீபத்தில் இலங்கை சென்ற இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் தலைமையிலான குழு, தமிழர்களுக்கு குறைந்தபட்சம் அதிகாரப் பகிர்வு அளிக்கக் கூடிய தீர்வை உருவாக்குமாறு விடுத்த பெயரளவுக் கோரிக்கையை கூட ராஜபக்சே ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதாக கொழும்புவில் இருந்து வெளிவரும் சிங்கள, ஆங்கில நாளிதழ்கள் தெரிவிக்கின்றன. 

ஆனால் தமிழர்கள் செத்தால் என்ன, இருந்தால் என்ன என்ற தமிழர் எதிர்ப்பு மனப்பாங்குடன் செயல்பட்டு வரும் இந்திய அரசு, அந்நாட்டுடன் எல்லா வகையிலும் நட்புறவு கொள்ளத் துடிக்கிறது. இந்திய அரசிற்கு தமிழர்களின் சம உரிமையோ அல்லது அவர்கள் கண்ணியமான வாழ்வைப் பெற வேண்டும் என்பதிலோ அக்கறை இருந்தால், தமிழர்களை கொன்றொழித்த இலங்கையுடன் மோதல் போக்கை கையாண்டிருக்கும். 

ஆனால் அது தமிழின எதிர்ப்புணர்வுடன் செயல்படுவதால், ஈழத் தமிழர், தமிழக மீனவர்கள் ஆகியோரின் உயிரைப் பலி கொண்டு வரும் சிங்கள பெளத்த இனவாத அரசுடன் நட்பு கொண்டாடி வருகிறது. அதன் ஒரு வெளிப்பாடாகவே, தூத்துக்குடிக்கும், கொழும்புவிற்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை மத்திய அரசு அங்கீகரித்து, அதனை தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர் ஜி.கே.வாசனைக் கொண்டு தொடங்கியும் வைத்துள்ளது. 

தமிழினத்திற்கோ, தமிழ் நாட்டுடனோ எந்த வகையிலும் தொடர்பில்லாத ஐரோப்பிய ஒன்றியம், தமிழினப்படுகொலை செய்த இலங்கை அரசு பன்னாட்டு விசாரணைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோரியது. அதற்கு உடன்பட மறுத்த இலங்கைக்கு இதுநாள் வரை அளித்து வந்த வணிக வரிச்சலுகைகளை நிறுத்தி விட்டது. 

ஆனால் தமிழர்களை தன்நாட்டினராகக் கொண்ட இந்தியாவோ, தமிழினத்தை கொன்று குவித்த இனவெறி அரசுடன் கூடிக் குலாவி வருகிறது. அது மட்டுமல்ல, இலங்கையுடமிருந்து நாம் விலகிச் சென்றால், அந்த நாடு சீனாவுடன் நெருக்கமாகி விடும். அது இந்தியாவின் நலனிற்கு எதிரானதாகி விடும் என்று nullச்சாண்டிக் காட்டுவது இந்திய அரசின் மோசடி முகத்தையே வெளிக்காட்டுகிறது. ஈழத் தமிழர் நலனிலும், தமிழக மீனவர்கள் வாழ்வுரிமையை பாதுகாக்கும் நோக்குடன் தமிழக அரசு, இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதார தடையை கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையிலேயே ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இத்தீர்மானத்தை மதிக்காமல், கொழும்புவுடன் பயணிகள் போக்குவரத்தை தொடங்கியுள்ளது மத்திய அரசு. இதன் மூலம் தமிழக அரசு தமிழ்நாட்டு சட்டப் பேரவையில் நிறைவேற்றிய பொருளாதார தடை தீர்மானத்தை மத்திய அரசு அவமதித்துள்ளது. பொருளாதாரத் தடையை தமிழர்களாகிய நாம் தமிழக அரசுடன் இணைந்து ஒருமித்த உள்ளத்துடன் முன்னெடுப்போம். இலங்கையின் பொருட்களை புறக்கணிப்போம். இலங்கையோடு செய்யும் வணிகத்தை தமிழக வணிகர்கள் நிறுத்த வேண்டும். இலங்கை நமது இனத்தை அழித்த எதிரி நாடு. அந்நாட்டுடன் எந்த உறவையும் வைத்துக் கொள்வதில்லை என்ற முடிவுடன் தமிழினம் செயல்பட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு சீமான் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago