முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்திரிகையாளர் கொலை: சோட்டா சகில் கூட்டாளிகள் கைது

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

மும்பை,ஜூன்.16 - மும்பையில் பிரபல பத்திரிகையாளர் ஜோதீர்மாய் தேவ் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக பிரபல மும்பை தாதா சோட்டா சகீலின் கூட்டாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையில் பிரபல ஆங்கில பத்திரிகையாளர் ஜே.தேவ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதற்கு அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த படுகொலையில் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டிருப்பதால் இதுகுறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா தலைவர் நிதீன்கட்காரி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் பத்திரிக்கையாளர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த தேவுக்கு போதுமான பாதுகாப்பு கொடுக்காததால் மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பட்டீல், மும்பை மாநகர தலைமை போலீஸ் அதிகாரி அனுப் பட்நாயக் ஆகியோர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முதல்வர் பிரித்விராஜ் சவாணை கேட்டுக்கொண்டனர். இதற்கு முதல்வர் சவான் மறுத்துவிட்டார். இதனையொட்டி பத்திரிகையாளர்கள் நேற்றுமுதல் மும்பையில் தொடர் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர். நேற்று நடைபெற்ற உண்ணாவிரத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்தநிலையில் பத்திரிகையாளர் ஜே.தேவ் படுகொலையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் புனே நகரை சேர்ந்தவர் மற்ற 3 பேர் மும்பை நகரை சேர்ந்தவர்கள். இவர்கள் 4 பேரும் பிரபல நிழல் உலக தாதா சோட்டா சகீலின் கூட்டாளிகள் என்று கூறப்படுகிறது. இதனால் ஜே.தேவ் படுகொலைக்கும் சோட்டாசகீலினுக்கும் தொடர்பு இருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். கடந்த 13-ம் தேதி அன்று தேவ் கொலையாளிகளை கைது செய்யக்கோரி மும்பையில் பத்திரிகையாளர்கள் கண்டன ஊர்வலம் சென்றனர். தற்போது போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் தொடர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்