முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்காசி எம்.எல்.ஏ. சரத்குமார் வாக்காளர்களுக்கு நன்றி

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      சினிமா
Image Unavailable

 

தென்காசி. ஜூன். 16 - தென்காசி சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சமத்துவ மக்கள்  கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திரைப்பட நடிகர் சரத்குமார் நேற்று தென்காசி நகர் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். நேற்று தென்காசி வருகை தந்த தென்காசி எம்.எல்.ஏ. ஆர்.சரத்குமார் நேற்று மாலை தென்காசி யாணைப்பாலம் பகுதியிலிருந்து புறப்பட்டு தென்காசி பழைய பஸ் நிலையம், தென்காசி வீட்டுவசதி காலணி, சிவந்திநகர், சக்திநகர் ஆகிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். 

திறந்த வேனில் நின்ற படி சென்ற எம்.எல்.ஏ. ஆர்.சரத்குமார் அப்போது பேசியதாவது:- தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் சமத்துவமக்கள் கட்சிக்கு 2 இடங்களில் போட்டியிட வாய்ப்பளித்த அஇஅதிமுக பொதுச்செயலாளருக்கு முதலில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த தென்காசி தொகுதியில் எனது வெற்றிக்காக அயராது பாடுபட்ட அஇஅதிமுக, மற்றும் தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள், சமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், மற்றும் என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச்செய்த வாக்காள 

பெருமக்கள் அனைவருக்கும் முதலில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்னை வெற்றி பெறச்செய்த மக்களுக்கு வேண்டிய அடிப்படை தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற அயராது பாடுபடுவேன். மேலும் நான் தேர்தல் நேரத்தில் உங்களிடம் தெரிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் வகையில் நேர்மையாகவும், உறுதியாகவும், உண்மையாகவும் உழைப்பேன் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து கொண்டு மேலும் ஒரு முறை நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம் இவ்வாறு அவர் பேசினார். இந்த  நிகழ்ச்சியில் அஇஅதிமுக, சமக, இகம்யூ, மா.கம்யூ, தேமுதிக, தமுமுக, மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony